பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பள்ளியெழுச்சி 239 அடுத்துள்ள பகுதி ஏற்றுயர் கொடியுடையாய் எமை யுடையாய்” என்பதாம். எமை உடையாய் என்பதால், அவன் தலைவன் அல்லது உடையவன் என்பதும், அடியவர் உடைமை அல்லது அடிமை என்பதும் பெறப் பட்டது. இவ்வாறு அடிமைப்படுவதிலும் ஒரு சிறப்பு உண்டு. எல்லோருக்கும் இச்சிறப்பு வாய்ப்பதில்லை. தகுதியில்லாதார்மாட்டு அடிமைப்படுவோர் பலர் இருக்க, இத் தலைவன் அப்படிப்பட்டவன் அல்லன்' என்பதைக் குறிப்பால் உணர்த்த 'ஏற்றுயர் கொடியுடையாய்' என்கிறார் அடிகளார். ஏறு என்பது அறத்தின் ஒரு வடிவாகும். அறத்தையே தன் கொடியாக உடைய ஒரு தலைவனிடம் அடிமையாவது இப்பிறப்பில் கிடைத்தற்கரிய ஒரு பயனல்லவா? இந்தக் கருத்தை மனத்தில் வாங்கிக்கொண்ட, நம் காலத்து வாழ்ந்த மகாகவி பாரதி, அடுத்தடுத்துள்ள இரண்டு அடிகளில் இக்கருத்தைக் கூறுவது சிந்திக்கத் தக்கதாகும். பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம் பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்’ (357-தமிழ்ப் பல்கலைக் கழகப் பதிப்பு) என்பது அவனுடைய பாடலாகும். 369. அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள் போய் அகன்றது உதயம் நின் மலர்த் திருமுகத்தின் கருணையின் சூரியன் எழ எழ நயனக் கடி மலர் மலர மற்று அண்ணல் அம் கண் ஆம் திரள் நிரை அறுபதம் முரல்வன இவை ஒர் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே . அலை கடலே பள்ளி எழுந்தருளாயே , 2