பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 என்பதை அறிதல் நலம். ஆனந்த வடிவினனாகிய இறைவனும், ஓர் ஒளி வடிவாக நம்முள் புகுந்து, கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து நம்மில் முழுவதும் நிறைந்துவிடுகிறான். ஆனந்த மலை ஆதலின், மலைக்குக் கூறப்பட்ட அத்தனை இயல்புகளும் ஆனந்தத்திற்கும் உண்டு. அதாவது, நம்மால் உணரப்படுகின்ற ஆனந்தம், மலை முகட்டைப் போன்று அளவால் சிறியதாகச் காணப்படுகிறது. மலையின் பெரும்பகுதி பூமிக்குள் மறைந்திருப்பதுபோல் இந்த ஆனந்தத்தின் பெரும் பகுதி நம்முடைய மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற நான்கிலும் நிரம்பியுள்ளது. அதற்குமேலும் ஆழமாக விரிந்து நின்று நம்மையே ஆட்கொள்ளும் அளவில் உள்ளது அந்த ஆனந்தம் என்பதை அறிய வேண்டும். - இறைவன் தருகின்ற இந்த ஆனந்தத்தில் மூழ்கியவர் கள், வேறு எதனையும் விரும்புவதில்லை. சங்கநிதி, பதுமநிதி போன்ற செல்வங்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. ஆனால், இவையல்லாத ஒரு நிதியை அவர்களும் வேண்டி நிற்கின்றனர். அதுவே, அருள் நிதி ஆகும். எனவே ஆனந்தத்தில் மூழ்கியிருப்பவர்களும் வேண்டி நிற்பது அவனது அருளே ஆதலால் அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே’ என்றார். இந்த அருள், கேட்டுப் பெறுகின்ற ஒன்றன்று. இந்த அருள், நம்முடைய தரமும், தகுதியும், உள்ளன்பும் வளர வளர ஆனந்தம் நம்மில் நிரம்புகின்றது. (அந்த ஆனந்தத்தை எவ்வளவுக்கெவ்வளவு) நான்’ என்ற அகங்காரத்தை மறந்து, அனுபவிக்கின்றோமோ, அந்த அளவுக்கு இறையருள் நமக்குத் தரப்பெறுகின்றது. நம் தகுதி நோக்கி அவனே வந்து அருளைத் தருகின்றானாதலின் அருள்நிதி தர வரும்’ என்றார், - -