பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பள்ளியெழுச்சி 243 மலையை அடுத்து, கடலைக் கூறியுள்ளார். அளவற்ற ஆழமும், எல்லையற்ற பரப்பும் கொண்டுள்ள கடல் தன் ஆழத்தில் முத்து, பவளம் முதலிய விலைமதிப்பற்ற பொருள்களை அடக்கியுள்ளது. மூச்சைப் பிடித்து, பயிற்சி செய்து கடலுள் அழுந்துபவர்கள் முத்து, மணி, பவளம் ஆகியவற்றை எடுத்து வருவர். அதுபோல அமைதி, ஆனந்தம், வீடுபேறு என்பவை இறைவனாகிய கடலின் ஆழத்தில் உள்ளன. ஏகாக்கிர சித்தத்துடன் தம்முள் மூழ்கி உள்ளே செல்வோர்க்கு ஆனந்தம், அமைதி முதலியவற்றைத் தரச் சித்தமாக உள்ளானாதலின் அவனைக் கடலே’ என்றார். 370. கூவின பூம் குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஒவின தாரகை ஒளி ஒளி உதயத்து ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத் தேவ நல் செறி கழல் தாள் இணை காட்டாய் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே யாவரும் அறிவு அரியாய் எமக்கு எளியாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே 3 குருகுகள்-பறவைகள். தாரகை-நட்சத்திரம். ஒவின-ஒழிந்தன; நீங்கின. - எங்கோ மரத்தில் மறைந்துகொண்டு, தன்னை வெளிப் படுத்திக்கொள்ளாமல், அக்கூ, அக்கூ என்று கூவுகின்ற குயிலும், நாம் காணுமாறு பூமியில் நின்றுகொண்டு "கொக்கரக்கோ’ என்று கூவும் கோழியும், நிறைந்துள்ள இடத்தில் பறவைகளும், சப்தமிட்டுப் பறக்கின்றன. ஒ’ என்ற ஒலி எழுப்பும் கோழியும், ஊ’ என்று ஒலி எழுப்பும் குயிலும் மேலும் கீழுமாக நிற்க, இடைப்பட்ட உயரத்தில் பறவைகள் பல்வேறு ஒலிகளை எழுப்புவதால் 'ம்' என்ற சப்தம் அங்கே தோன்றுகிறது. இந்த மூன்று ஒலிகளையும்