பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 எழுப்பும் கர்த்தாக்கள் அஃறிணையான பறவைகள் ஆகும். இவற்றின் இடையே மக்களால் ஒலிக்கப்படும் சங்கநாதம் 'ஓம்' என்ற ஒலியை எழுப்புகின்றது. சங்கநாதத்தை எழுப்பு கின்றவர்கள் மக்களே ஆயினும், இந்த ஒலிப் பிரபஞ்சத்தில் அந்தச் சாதாரண மக்களுக்கு இடம்பெறத் தகுதியில்லை என்று அடிகளார் நினைத்தார் போலும். ஆதலால்தான் 'சங்கு இயம்பினார்' என்று கூறாமல், 'இயம்பின சங்கம் என்று கூறுகிறார். மேலே கூறிய ஒலிகள் தோன்றுகின்ற காலத்தில், தாரகைகள் ஒளி மழுங்கிவிடுகின்றன. சென்ற இரண்டு பாடல்களில் திருமுகத்தில் மலர் கின்ற நகையைப்பற்றிப் பேசிய அடிகளார், இப்பாடலில் அவருக்கே உரித்தான முறையில், தாளினை காட்டாய்' என்று பாடுவது சற்றுப் புதுமையானது. பள்ளியினின்று எழ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறவர்கள், திருவடியைக் காட்டுவாயாக என்று பாடுவது சற்றுப் புதுமையானது. இறைவடிவத்தைப் பொறுத்தமட்டில், இறைவனது திருவடிகளிலேயே அடிகளார் அதிகம் ஈடுபட்டா ராதலின் இங்கும் "தாளினை காட்டாய்” என்று பாடுகிறார். - 371. இன் இசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணை மலர்க் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே என்னையும் ஆண்டுகொண்டு இன் அருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளயே 4