பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பள்ளியெழுச்சி 245 இருக்கு-ருக்வேத மந்திரம். துன்னிய-நெருங்கிய பிணைமலர்பிணைக்கப்ட்ட மலராகிய மாலை. துவள்கை-சிவானந்தமேலீட்டால் துவளுதல். அஞ்சலி-கைகுவித்த வணக்கம். திருப்பெருந்துறை நாயகன் உறைகின்ற திருக்கோயிலை ஒர் அரண்மனை போல உருவகிக்கிறார் அடிகளார். அரசன் உறங்கும் இடத்திற்குக் கீழே திருஒலக்க மண்டபத்தின் ஒருபால் பிறிதொரு மண்டபம் உள்ளது. அதில் கூட்டம் நிரம்ப வழிகின்றது. அக்கூட்டத்தினுள் யார் யார் உள்ளனர், அவர்கள் என்ன செய்கின்றனர் என்பதைத் தம் தலைவனாகிய இறைவனுக்கு உணர்த்தும் கடமையை மேற்கொள்கின்றார் அடிகளார். - மிகப் பழமையான யாழ் வாசிப்போர் ஒருபுறம்; அடுத்துத் தோன்றிய புதுமையான வீணை வாசிப்போர் ஒரு புறம். இவை இரண்டும் வெவ்வேறான நரம்புக் கருவிகள். ஒரு ஸ்வரத்திற்கு ஒரு நரம்பு என்ற முறையில் ஏழு நரம்புகளை உடையது யாழ். அன்றியும் மூன்று ஸ்தாயைகளுக்கும் ஒவ்வொன்றுக்கும் ஏழு வீதம் இருபத்தொரு நரம்புகளைப் பெற்றது பேரியாழ் எனப்படும். இதிலுள்ள ஒவ்வோர் நரம்பையும் விரல்களால் சொடுக்கி, அதற்குரிய ஸ்வரத்தை வெளிப்படுத்த வேண்டும். இதனெதிராக வீணையில் மெட்டுகள் இருக்கின்ற காரணத்தால் ஒரே நேரத்தில் எல்லா ஸ்வரங்களையும் வாசிக்கமுடியும். அதோடில்லாமல் இந்த ஒரே கம்பியில் மூன்று ஸ்தாயைகளிலும் வாசிக்க முடியும். இவையிரண்டும் யாழில் முடியாது. யாழ் விட்டிசைக்கும் கருவியாதலால், இன்னிசை வீணைக்கு அடுத்த படியாக யாழிசை பற்றி பேசுகிறார் அடிகளார். இந்த இசைவாணர்களை அடுத்து வேதம் ஒதுபவர்களும், தோத்திரப் பாடல்களை ஒதுபவர்களும் கூடியுள்ளனர். அடுத்து, மலர் மாலையைத் தொடுத்து, கைகளில் ஏந்திக் கொண்டு திருவடிகளில் சாத்துவதற்குத் தயாராக உள்ளனர் ஒரு சாரார். அடுத்துள்ள கூட்டத்தில் மூன்று