பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 திருப்பள்ளியெழுச்சி 249 உள்ளுறையாய் இவற்றின் உள்ளே நிலை பெற்றிருக்கும் ஒருவனை மெய்ஞ்ஞானிகள் ஒரளவு கண்டார்கள். முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளான இவன் போக்கும் வரவும் இல்லாது இருப்பதை அநுமானத்தால் அறிந்தார்கள். எனவே, அவனை வழுத்தும் பாடல்களில் அவன்பாலுள்ளதாகக் கருதப்படுகின்ற இந்த இயல்புகளைப் பெய்து பாடினர். இதுவரை சிக்கல் ஒன்றும் தோன்றவில்லை. இவ்வாறு பாடி, ஆடுபவர்கள்கூடக் கண்டறியாதவன் அவன் என்று கூறுவது சரியா? அடிகளாரே கண்ணால் யானும் கண்டேன் காண்க. (திருவாச. 3-58) என்றும், புவனியில் சேவடி தீண்டினன் அவனைச் சிவன் என யானும் தேறினன்’ (திருவாச.3-61,62) என்று பாடியுள்ளாரே. அப்படியிருக்க, கண்டவர்களே இல்லை என்று கூறுவது எவ்வாறு பொருந்தும்? 8ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த அடிகளாருக்கு முன்னர், எத்தனையோ அடியார்கள் இறைக்காட்சி பெற்றுள்ளனரே! அப்படி யிருக்க, கண்டவர்கள் இல்லை என்று பொருள் கூறுவது பொருந்துமா என்று சிந்தித்தல் நலம். இப்பொழுது மறுபடியும் அத்தொடர்களை நோக்கு வோம்: கேட்டறியோம் உனைக் கண்டறிவாரை என்பதில் கேட்டறியோம் என்ற தொடர் சிந்திக்கத் தக்கது. எதைக் கேட்டறியோம்? 'கண்ணால் அவனைக் கண்டதில்லை. இது ஒரு புறம் இருக்க, கண்ணால் கண்டவர்கள் உண்டு என்று பிறர் சொல்லி, காதால் கேட்டதுகூட இல்லை’ என்ற பொருளைத் தருவதாகும் இத்தொடர். அடுத்துள்ளது கண்டு அறிவாரை என்ற இரண்டு சொற்கள் அமைந்த ஒரு தொடராகும். கேட்டறியோம்' என்பதை ஒருசொல் நீர்மையதாகக் கொண்டு, கேட்டதில்லை என்று பொருள் செய்வதுபோல, கண்டறிவாரை என்பதையும் ஒரு சொல் நீர்மையதாகக்