பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 வளி விழுங்குவதும், இறுதியாக இவை அனைத்தும் தம் உரு மாறி அணுவடிவாய் ஆகாயத்தில் தங்கிவிடும் ஒரு நிலையும் உண்டு. அவ்வாறு மாறுகின்ற இந்த ஐம்பெரும் பூதங்களும் அஷ்டமூர்த்த வடிவங்களில் உள்ளன. ஆதலால், இவையே அவன் வடிவம் என்று கொள்ளுதல் சரியன்று என்பதை மாபெரும் விஞ்ஞானியாகிய அடிகளார் அறிவார் ஆதலால், நின்றாய் என்ற சொல்லைப் பயன் படுத்துகிறார். இந்த ஐம்பெரும் பூதங்களும் எவ்வளவுதான் தம் நிலை மாறினாலும், அந்த மாறுபட்ட நிலையிலும், அவற்றின் உள்ளுருவாய், தான் மாறாமல் இறைவன் உள்ளான். ஆதலின், பூதங்கள் தோறும் நின்றாய்” என்றார். அப்பூதங்கள் தம் உருமாறி, அணுவடிவாக நிற்கின்ற காலத்தில், பழைய நிலைக்குள்ள இயல்புகள் அந்த அணுத் தன்மையில் இருப்பதில்லை. ஆனால், அவற்றின் உள்ளுறையாய் நிற்கும் அவன் மாறாத இயல்பினன் ஆதலால், அவனுக்குப் பிறப்புமில்லை இறப்புமில்லை என்கிறார். போக்கிலன், வரவிலன்' என்பதன் பொருள் இதுவேயாகும். பூதங்களின் தோற்றம், நிலைபேறு, மறுவடிவு ஆகியவற்றை யாரும் நேரிடையாகக் கண்டதில்லை. இவற்றின் இயல்புகளையே யாரும் காணமுடியாதென்றால், இவற்றின் உள்ளுறையாய் நிற்கும் ஒருவனை யார் காண முடியும்? ஒருவரும் கண்டதில்லை. ஆனால், தம் மெய்ஞ்ஞான வளர்ச்சியாலும், பசு கரணங்கள் பதிகரணங்களாக மாறியதாலும், சாதாரண மனிதர்கள் காணமுடியாத சிலவற்றை இந்த ஞானிகள் காணமுடியும். வீட்டினுள் இருப்பவன் நான்கு சுவர்களைத்தான் காணமுடியும். ஆனால், விமானத்திலிருப்பவன் சுற்று வட்டாரத்தையும் காணமுடியும். அதுபோல மாறுகின்ற இந்தப் பூதங்களைமட்டும் கண்டுகொள்ளாமல் இவற்றின்