பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பள்ளியெழுச்சி 247 முதலிரண்டு அடிகளில் கூறப்பெற்ற பல்வேறு வகையான அடியார்கள் காத்து நிற்கின்றனர் என்று கூறிவிட்டு, ‘என்னையும்’ என்ற சொல்லைப் பயன்படுத்தும் பொழுது அந்த உம்மை இழிவுச் சிறப்பின் எல்லையைத் தொட்டுவிடுகின்றது. - 372. பூதங்கள்தோறும் நின்றாய் எனின் அல்லால் போக்கு இலன் வரவு இலன் என நினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டு அறியோம் உனைக் கண்டு அறிவாரை சீதம் கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா சிந்தனைக்கும் அரியாய் எங்கள் முன் வந்து ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டு அருள்புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே 5 போக்கு வரவு-இறப்பும் பிறப்பும். புலவோர்-அறிஞர். ஏதம்-குற்றம். இப்பாடலின் இடையே வரும், கேட்டறியோம் உனைக் கண்டறிவாரை என்ற தொடர் நுணுக்கமும், சிக்கலும் வாய்ந்தது. கண்டறிவார் யாருமில்லை என்று கொண்டு, பெருமானே! உன்னைக் கண்டேன்' என்று சொல்லிக் கொள்பவர்கள் எவரையும் நாங்கள் கேட்டது கூட இல்லை என்று இதுவரை பலரும் பொருள் கூறியுள்ளனர். இவ்வாறு கூறுவதில் தவறு ஒன்றும் இல்லையென்றா லும் அடிகளாரின் ஆழ்ந்த கருத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளாமல் மேலோட்டமாகப் பொருள் செய்த குறை நேர்ந்துவிடும். இதனைச் சற்று விரிவாகக் காணலாம். ஐம்பெரும் பூதங்களிலும் நீ நிலைபெற்றுள்ளாய் என்று சொல்வதற்கு நின்றாய்” என்ற சொல்லைப் பயன் படுத்துகிறார். இந்த ஐம்பெரும் பூதங்களும் ஒரே வடிவில் எப்பொழுதும் நிலைபெற்றிருப்பதில்லை. மண்ணை நீர் விழுங்குவதும், நீரை நெருப்பு விழுங்குவதும், நெருப்பை