பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 கொண்டு 'கண்டவர்களைக் கண்டதில்லை’ என்று பொருள் செய்துவிட்டோம். 'கண்டு அறிவாரை என்ற இரண்டு சொற்களையும் தனித்தனியே பிரித்துப் பொருள் கர்ணவேண்டும். ஒரு பொருளைக் காண்பது என்பது ஒன்று; அதுபற்றி அறிவது என்பது மற்றொன்று, காண்டல் என்பது புற உடலோடு தொடர்புடைய கண்ணாகிய பொறியின் செயலாகும். அறிதல் என்பது இப்பொறிபுலன்களின் எல்லைக் குட்பட்டதன்று. கட்பொறியால் ஒன்றைக் காணாவிடினும், அறிவின் துணைகொண்டு அப்பொருள்பற்றிய ஆய்வில் ஈடுபட்டு, அதன் இயல்புகளை அறிந்துகொள்ள முடியும், ஆனால், நம்முடைய பொறி, புல எல்லைக்குட்பட்ட இந்தப் பிரபஞ்சத்திலுள்ள பொருள்களைப்பற்றித்தான் நம்முடைய சாதாரண அறிவு அறிந்துகொள்ள முடியும். இதனை அபர ஞானம் என்று நம் முன்னோர் கூறினர். இதனை ஒரளவு அறிதல் இயலும். ஆனால், இதிற்கூட ஒரு பொருளைப்பற்றி முழுவதும் அறிந்தோம் என்று சொல்வது இயலாத காரியம். அறிவின் துணைகொண்டு அறியப்படும் எல்லா முடிவுகளுக்கும் இது பொதுவான தாகும். அபர ஞானத்தால் பெறும் ஒரு முடிவுகூட முழுத் தன்மை பெற்றவை அல்ல. எனவே, ஒரு பொருளை நாம் முற்றிலும் அறிவோம் என்று சொல்வது அறியாமை உடையதாகும். குணம் குறி கடந்த பரம்பொருள், நாம ரூபம் கடந்ததாயினும் தன் அளப்பில் கருணை காரணமாகப் பல்வேறு வடிவம் எடுத்து, பல்வேறு சமயங்களில் பல்வேறு இடங்களில் தோற்றம் அளிக்கிறது என்பது உண்மைதான். இத்தகைய தோற்றங்கள் பல உண்டு என்றாலும், ஒருவர் காணும் ஒரு தோற்றத்தை அவர் பக்கத்தில் நிற்கும் மற்றொருவரும் கண்டார் என்று கூறுவது சரியன்று.