பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பள்ளியெழுச்சி 251 காழிப் பிள்ளையார் தம் சின்னஞ் சிறிய சுட்டுவிரலை ஆகாயத்தில் காட்டி, அங்குக் காட்சி தரும் அம்மையப்பரை இப்பெருமான்தான் எனக்குப் பால் அளித்தான்’ என்று கூறுகிறார். அந்தச் சுட்டுவிரலால் காட்டப்பெற்ற உமையொருபாகன், அவருக்குக் காட்சி தந்தானே தவிர, அவர் தந்தையாகிய சிவபாத இருதயருக்குக் காட்சி தரவில்லை. காழிப்பிள்ளையார் போன்று ஒரோவழி இறைக் காட்சியைப் பெற்றவர்கள் ஒரு சிலர் உலகமுழுவதிலும் அன்றும், இன்றும், என்றும் உண்டு. - இப் பெருமக்கள், தம் உயர்வு காரணமாக இப்புற உடம்பிற்குரிய கண் ஆகிய பொறியாலேயே இறைத் தரிசனம் செய்கின்றனர். அடிகளார் குறிப்பிடுவது இவர்களையும் சேர்த்துத்தான். அடிகளாரும் இறைத் தரிசனம் பெற்ற இவர்களோடு சேர்ந்தவர்தான். அப்படியிருக்க, கேட்டறியோம் என்று சொல்வது எவ்வாறு பொருந்தும்? அடுத்து வரும் கண்டறிவாரை என்ற தொடரை மறுபடியும் சிந்திப்பது நலம். மேலே கூறிய இறையடியார்கள் அனைவரும் இறைவனைத் தம் கண்களால் கண்டது உண்மைதான். ஆனால், இவர்கள் யாரும் அவனை முழுவதும் அறிந்தார்கள் இல்லை. காரணம், அவனே தன் பெருமை தான் அறியாத் தன்மையன் ஆவான். இதை விளங்கிக்கொண்டால், பூதங்கள் தோறும் நிற்கின்ற அவனைக் கண்டவர்களைக் கண்டதும் உண்டு, கேட்டதும் உண்டு. ஆனால், அவனை அறிந்தவர்களைக் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை என்பதே இதன் உண்மையான பொருளாகும். அறிவால் அறியப்படுவது ஒரு வகை. அதாவது காரண காரிய அடிப்படையில், அனுமானம் முதலிய பிரமாணங்களை ஏற்றுக்கொண்டு தொழிற்படும் அறிவால், அறியப்படுவது அது. இதனைக் கடந்து நிற்பது சிந்தனை.