பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 இந்தச் சிந்தனையின் வளர்ச்சிக்குக் காரண காரியம், அனுமானம் முதலியவை தேவையில்லை. நான் யார்? என்ற வினாவைச் சிந்தித்துக்கொண்டேயிருந்து உண்மை நிலையை ஓரளவு அறிந்தவர்கள் இன்றும் உண்டு. நான் யார் என்ற வினாவை முன் வைத்துச் சிந்திக்கலாமே தவிர, 'அவன் யார்’ என்ற வினாவை முன்வைத்துச் சிந்திக்கத் தொடங்கினால், எவ்வித விடையும் வருவதில்லை. அதனாலேயே அடிகளார் எண்ணத்திற்கு அரியவன்; அறிவுக்கு அரியவன் என்று கூறாமல், சிந்தனைக்கும் அரியாய் என்றார். இந்த உம்மை இறந்தது தழிஇய எச்சவும்மையாக நின்று, எண்ணம், அறிவு என்பவற்றைக் காட்டி நிற்பதோடு, உயர்வுசிறப்பு உம்மையாகவும் தொழிற்பட்டு, சிந்தனையைவிடச் சிறந்தது வேறில்லை என்பதை அறிவுறுத்திநிற்கின்றது. 373. பப்பு அற வீட்டு இருந்து உணரும் நின் அடியார் பந்தனை வந்து அறுத்தார் அவர் பலரும் மைப்பு உறு கண்ணியர் மானிடத்து இயல்பின் வணங்குகின்றார் அணங்கின் மணவாளா செப்பு உறு கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே இப் பிறப்பு அறுத்து எமை ஆண்டு அருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே 6 பப்பற-பரபரப்பு இல்லாமல். மைப்பு உறு கண்ணியர்-கருமையுற்ற கண்ணினையுடையார். அணங்கு-உமா தேவியார். திருக்கோயிலில் வழிபட வருகிறவர்கள் { {☾l? திறத்தினர் ஆவர். எல்லாவற்றையும் கடந்த மகா ஞானியர் களும் இறுதியாகத் தாம் எடுத்துள்ள பிறப்பைப் போக்கிக் கொள்ள, அவன் அருளை நாடித் திருக்கோயிலுக்கு வருகின்றனர். இவர்களுக்கு நேர்மாறாக, இயல்பான மனித வாழ்க்கைக்குரிய காமம் முதலிய அறுவகைக் குற்றங்