பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பள்ளியெழுச்சி 253 களையும் உடைய சாதாரண மனிதர்களும் தங்கள் குறைகளைப் போக்க வேண்டித் திருக்கோயிலுக்கு வழிபட வருகின்றனர். இங்ங்ணம் வருகின்றவர்கள் ஆண் பெண் இரு பாலரும் ஆவர். - இவ்விரு சாராரும், அதாவது மகா ஞானிகள் முதல் சாதாரணமான ஆண், பெண் ஆகியோரும், தாம் எடுத்த மானுடப் பிறப்பிற்கேற்ப வழிபாட்டு முறைகளைக் கையாளுகின்றனர். l பரு உடலோடு கூடிய மானிடராகப் பிறந்தவர்கள் இறைத் திருப்பணியில் ஈடுபடுவது அவசியமாகும். அதாவது, திருக்கோயில் அலகிடுதல், மெழுகிடுதல், துய்மை செய்தல் என்பவற்றோடு, பல்வகை மலர்களைப் பறித்து மாலைகளாகக் கட்டி, படைத்தவனின் திருவடியில் சாத்துதல் என்பவை மானிட வழிபாட்டு முறைகளாகும். இக்கருத்தையே பின்வருமாறு விளக்குகிறார். மனத்தினுள் பரபரப்பு அறத் தேவையற்ற எண்ணங்களை விட்டுவிட்டு அமைதியாக ஓர் இடத்தில் இருந்து இறைநினைவில் ஆழவேண்டும். அதன் பயனாக அவன் திருவருளை அனுபவிக்கும் (உணரும்) அவன் அடியார்கள் இப்பிறப்பில் இயல்பாக உண்டாகக்கூடிய பந்தபாசங்களை, திருவருளை உணர்ந்த காரணத்தால் அறுக்க முடிந்தது. அப்படி அறுத்த பலரும் மானிடராக இருக்கின்ற காரணத்தால், திருக்கோயில் பணி, மால்ை கட்டும் பணி ஆகியவற்றில் ஈடுபட்டு, கையில் மாலைகளோடு வந்து நிற்கின்றார்கள். - அணங்கின் மணவாளா என்று விளிப்பது ஒரு கருத்தை உட்கொண்டதாகும். ஐயனே! நீ எங்கள்மாட்டு இரங்கவில்லையாயினும் எங்கள் தாய் எங்களைக் கைவிட்டுவிட மாட்டாள். அம்மட்டோடு நில்லாமல்