பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பள்ளியெழுச்சி 261 இதற்கு மறுதலையாக இந்நாட்டவர் கண்ட பரம கருணையுடையவனாகிய இறைவன், தன்னால் படைக்கப் பெற்ற உயிர்கள் உய்கதி அடைய வேண்டுமென்று அவை; இருக்குமிடம் தேடிச் செல்கிறான். அப்படிச் செல்பவன் கருணையின் வடிவமாகிய தாயையும் உடன் அழைத்தே செல்கிறான். எல்லாப் பற்றுக்களையும் நீக்கி, ஏகாக்கிர சிந்தையோடு-எந்நேரமும் திருவடி நினைவோடு வாழும்அடியார்கள் வாழும் இடம் பழங்குடிலாகத்தான் இருக்கும். காரணம் குடில்பற்றிய நினைவோ அதனைப் பழுதுபார்த்துப் புதுப்பிக்க வேண்டுமென்ற நினைவோ இந்த அடியார்கள் மனத்தில் தோன்றியதில்லை. எனவே அதனைப் 'பழங்குடில்’ என்றார். ட - இதைவிடச் சிறப்பு என்னவென்றால் பிரபஞ்சத்தைப் படைத்து, அதில் தனு, கரண, புவன, போகங்களாகிய நான்கையும் படைத்து, அவை அனைத்தையும் தன்னால் படைக்கப்பெற்ற உயிர்களுக்குத் தந்துவிட்டுத் தான்மட்டும் சுடுகாட்டில் உறைபவன் அல்லவா அவன்! அப்படிப் பட்டவன் பந்தணை விரலியோடு தன் அடியார்கள் வாழும் பழங்குடிலில் சென்று தங்கிவிடுதல் புதுமை இவ்வாறன்றிப் பழங்குடில் என்பதற்கு அடியார்களின் 'இதய கமலம்' என்றும் பொருள் கொள்ளலாம். இந்த அடியார்கள், தான்-தனது என்ற அகங்கார-மமகாரம் அற்றவர்கள் ஆதலால், அவர்கள் பெற்ற உடலைப் பேணிக் காக்கும் வழக்கத்தை மேற்கொள்வதில்லை. எனவே, பழங்குடில் என்று அவ்வுடல்களைச் சொல்வதில் தவறு ஒன்றும் இல்லை. அன்றி, மற்றொரு பொருளும் இதற்குக் கூறலாம். இவ்வடியார்கள் அனைவரும் வழிவழியாக எல்லையற்ற