பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 வேதகாலத்திற்கு மிகவும் பிற்பட்ட காலத்தில், அதாவது புராண காலத்தில், மும்மூர்த்திகள் என்ற கருத்து வலுப்பெற்றுவிட்டது. ஆழ்வார்கள், நாயன்மார்கள் ஆகிய அனைவரும் மும்மூர்த்திக் கொள்கையை ஏற்றுக் கொண்டே பாடுகின்றனர். இப்பாடலில் அடிகளார் மும்மூர்த்திகள் யார் என்று பெயரிட்டுக் கூறவில்லை ஆயினும், பிற இடங்களில் அவர் கூறியதை வைத்துக்கொண்டு பொருள் கொண்டால், அழித்தல் தொழிலுக்கு உருத்திரன் அதிகாரி என்று கருத நேரிடும். எந்த இடத்திலும் இந்திரன் இப்பிரபஞ்சத்தை அழித்ததாகக் கதை ஒன்றும் இல்லை. எனவே மூவர் என்ற சொல்லுக்கு இந்திரன், நான்முகன், நாரணன் என்று பொருள் கொள்வது சரியன்று. முதல் தெய்வங்கள் என்று சொல்லப்படும் உருத்திரன் முதலிய மூவருமே தம் தலைவனைத் தெரிந்து கொள்ளவில்லை என்றால் வேறு யாவர் மற்று அறிவார்’ என்று அடிகளார் சொல்வது பொருத்தமேயாகும். அடுத்துள்ள 'பழங்குடில்தொறும் எழுந்தருளிய பரனே என்பது, இந் நாட்டவரின் சமயத்தின் தனிச் சிறப்பை எடுத்து விளக்கும் பகுதியாகும். இந்நாட்டுப் பழைய சமயங்களாகிய, சைவ வைணவம் தவிர, இங்கும் வெளிநாடுகளிலும் தோன்றிய எந்தச் சமயமும், மக்கள் பொருட்டு இறைவன் கீழே இறங்கி வந்தான் என்ற கருத்தைச் சொல்லவில்லை. ஏசு சமயம்கூட இந்த உலகை உய்விப்பதற்காகப் பிதா தன் ஒரே மகனை அனுப்பினான் என்றுமட்டுமே கூறுகிறது. எல்லா உயிர்களும் மெய்ஞ்ஞானம் பெற்று அவனிடம் செல்ல வேண்டுமானால் அது ஏறத்தாழ இயலாத காரியம். அவருள் ஒரு சிலர்மட்டுமே மாபெருந் தவங்கள் செய்து, எல்லையற்ற இறையன்பு பூண்டு அவனை அடையலாம்.