பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பள்ளியெழுச்சி 259 தாக்கள் மூவர் வேண்டும். பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூவரும் தங்கள் கடமைகளைச் செய்கிறார்களே அன்றி, தங்களை அக்கடமைகளைச் செய்ய ஏவிய ஏவுதல் கர்த்தா யார் என்பதை அறிந்தார்கள் இல்லை என்கிறார். இப்பாடலில் வரும் மூவரும் என்ற சொல்லிற்கு, பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் என்று பொருள் கொள்ள விரும்பாத சைவப் பெருமக்கள், மூவர் என்று வரும் பிற இடங்களில் இந்திரன், மால், அயன் என்று அடிகளாரே கூறுவதை எடுத்துக்காட்டுகின்றனர். வேதத்தில் உருத்திரனுக்குக் கொடுக்கப்பட்ட இடம் மிக மட்டமானதாகும். பிற்காலத்தார் இந்த உருத்திரனையும் மூலப் பொருளான சிவபெருமானையும் ஒருவரே என்று கருதி இடர்ப்படலாயினர். வேதத்தில் வரும் உருத்திரன் அழித்தல் தொழிலைச் செய்பவன். ஆயினும், எந்த யாகத்திலும் அவிஷ் பெறும் தகுதி உடையவனல்லன். அன்றியும் யாக பூமியில் சிதறும் பொருள்களையும், பலியிடப்படாமல் காயப்படுத்தப்பட்ட விலங்குளையும் தனக்கென்று ஏற்றுக்கொள்ளும் தகுதிதான் ரிக் வேதத்தில் காணப்படும் உருத்திரனுக்கு உண்டு. ஆகவே, சிவனுக்கும் இவனுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இந்திரன் முதலானவருக்குக் கொடுக்கப்படும். அவி உணவில் உருத்திரனுக்குப் பங்கில்லை. பசூநாம்பதி’ (விலங்குகளுக்குத் தலைவன்) என்ற பட்டத்தை இருக்கு வேதம் உருத்திரனுக்குத் தருகின்றது என்றாலும், இந்திரன் முதலிய தெய்வங்களோடு உருத்திரனை வைத்து எண்ணவில்லை. இருக்கு வேதத்தில் ஒரு பகுதியும், கிருஷ்ண யஜுர் வேதத்தில் ஒருபகுதியாகிய பூரீருத்திரமும் அவன் அழித்தல் தொழிலைச் செய்பவன் என்பதைப் பேசுகின்றன.