பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 தோற்றம் இல்லாமல் வெறும் காலமாக இருக்கும்போது அக்காலத் தத்துவத்திற்குத் தோற்றம், இருப்பு, மறைவு என்ற நிலைகள் இல்லை. எனவே, அடிகளார் முதல் நடு இறுதியும் ஆனாய்’ என்று குறிப்பிடுவது, இப்பிரபஞ்சத்தையும் அதனை ஊடுருவி இருக்கும் இறைவனையுமே ஆகும். இப்பிரபஞ்சம் ஒன்றிற்குத்தான் தோற்றம், நிறைவு, மறைவு என்ற மூன்று நிலைகளும் உண்டு. இந்த மூன்றையும் கூறி, ஆனாய்’ என்று குறிப்பது ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றாகும். - இறுதியும் ஆனாய் என்பதில் உள்ள உம்மை "முற்றும்மை என்ற கொள்ளத் தேவையில்லை. இறுதியும் ஆனவன் என்றால் இறுதிக்கு அப்பாற்பட்ட ஒன்று இருப்பின்; அதுவும் ஆனவன் என்ற பொருளையும் தந்து நிற்கும். இறுதியும் என்ற சொல்லால், தோற்றுவிக்கப்பட்ட பிரபஞ்சத்திற்குத்தான் இறுதி உண்டே தவிர, தோற்று வித்தவனுக்கு இறுதி இல்லை என்பது பெற்றாம். இறுதி இல்லை என்று கூறவே, தோற்றம் இல்லை என்பது தானே பெறப்படும். தோற்றம், இறுதி என்ற இரண்டும் இல்லாவிடினும், இடையே உள்ள இருப்பு நிலை மட்டும் அப்பொருளுக்கு என்றும் உண்டு. . முதல் நடு இறுதி என்று கூறுவதற்கு முன்னர், முந்திய என்ற சொல்லை அடிகளார் பெய்துள்ள்ார். அனைத்திற்கும் இறுதி ஏற்பட்ட பிறகும், அதாவது அனைத்தையும் அழித்தபிறகும், தான் ஒருவனே. எஞ்சியுள்ளான். ஆதலால், இவ்வனைத்தும் மீட்டும் தோன்றுவதற்கு முன்னரும் அவன் உள்ளான் என்பது பெறப்படுகிற தன்றோ? இதனையே முந்திய’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். - அடுத்து நிற்பது மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார்' என்ற தொடராகும். பிரபஞ்சத்தைத் தோற்று வித்து, காத்து, அழிக்க வேண்டும் எனின், அதற்குரிய கர்த்