பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பள்ளியெழுச்சி 257 நிலைகளில் தவறு ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனால், மூன்றாவது நிலையில் எக்காரணம் கொண்டும் தவறு நிகழ வாய்ப்பே இல்லை. அவனுடைய உத்தரவு வருகின்றவரையில் எவ்விதப் பணியும் செய்யாது காத்து நிற்பவர்களும், அவன் பணியையே செய்கிறார்கள் என்பது இந்நாட்டவரும் பிறநாட்டவரும் கண்ட உண்மையாகும். இந்த கருத்தை மேனாட்டின் தலைசிறந்த காப்பியக் கவிஞனாகிய ஜான் மில்டன் ஒர் அடியில் மிக அற்புதமாக விளக்குகிறான். 'அவன் சந்நிதியில் நிற்பவர்களும் அவன் பணியையே செய்கிறார்கள்' என்ற &ECŞāści) “They also serve who stand and wait' (Milton’s Sonnet) என்று பாடியுள்ளான். அடிகளாருக்கும் வேற்று நாட்டில் வாழ்ந்த மில்டனுக்கும் இந்த அருங்கருத்து ஒரே மாதிரியாகத் தோன்றியது வியப்புக்குரியதாகும். 375. முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார் பந்து அணை விரலியும் நீயும் நின் அடியார் பழம் குடில்தொறும் எழுந்தருளிய பரனே செம் தழல் புரை திருமேனியும் காட்டி திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய் ஆர் அமுதே பள்ளி எழுந்தருளாயே 8 பந்தணை விரலி-பந்துகள் வந்து சாருகின்ற விரலினை உடைய உமாதேவி. பழங்குடில்-பழங்குடிசையாகிய உடம்பு. இப்பாடலின் முதல் அடி முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்’ என்பது ஆகும். முக்கூட்டுப் பரிமாணமுடைய இந்தப் பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னர் வெறும் காலத் தத்துவம் ஒன்றுமட்டுமே இருந்தது என்பதை அடிகளார் ஞாலமே விசும்பே இவை வந்து போம் காலமே உனை என்றுகொல் காண்பதே' (திருவாச:47) என்று பாடுகின்றார். எனவே, பிரபஞ்சத்