பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 முழுவதுமாகக் கண்டு, இது அவன் திருவுரு என்று கூறமுடியாவிட்டாலும் ஒருசில இயல்புகள் மட்டும் வைத்துக் கொண்டு 'இதோ இவன்தான் என்றும் அதோ அவன்தான் என்றும்கூடக் கூற முடியாதவர்க்ளாக உள்ளனர், அத்தேவர்கள். ஆனால், இறைவனைப் பொறுத்தமட்டில் உலகில் உள்ள எல்லாப் பருப்பொருள்களிலும் கலந்துறையும் இயல்பினன் ஆதலின், தனிப்பட ஒன்றை எடுத்து இது அவன் திருவுரு என்று கூறமுடியாது. அவ்வாறு கூறினால் இத்திருவுரு அல்லாத மற்றைய உருவுகள் அவன் வடிவமல்ல என்ற முடிவுக்கு வர நேரிடும். அதேபோல, குறிப்பிட்ட அங்க அடையாளங்கள், இயல்புகள் போன்றவற்றை வைத்துக்கொண்டு, இவன் என்று கூறினால், அவன் அல்லன் என்ற நிலை தோன்றிவிடும். இதனை மறுப்பதற்காக, நுண்மையான வடிவு பெற்று மேல் உலகத்தில் சஞ்சரிக்கின்ற தேவர்கள் கூட, இவனை நன்கு அறியமுடியவில்லை என்கிறார். அப்படிப்பட்ட ஒருவன் தன் கருணை காரணமாகவே இங்குத் திருப்பெருந்துறையில் எழுந்தருளி எங்களை ஆண்டு கொண்டான் என்றபடி, பாடலின் இறுதி எது எமைப் பணிகொளும் ஆறு அது கேட்போம்” என்பதாகும். ஆண்டான் அடிமைத் திறத்தில் மிக உயர்ந்த நிலையைச் சுட்டுவதாகும் இது. தலைவனுடைய குறிப்பு அறிந்து தொழிற்படுதல் ஒரு நிலை. தலைவனுடைய மனநிலை இதுதான் என்று தனக்குத் தானே (ԼՔւգ-օվ செய்துகொண்டு தொழிற்படுவது இரண்டாவது நிலை. எவ்விதமான முடிவையும் தானே எடுக்காமல், தலைவனுடைய ஆணை வருகின்றவரை காத்து நிற்பது மூன்றாவது நிலையாகும். இந்த மூன்று நிலைகளும் சிறந்தவைதான் என்பதில் ஐயமில்லை. எவ்வளவு ஜாக்கிரதையாகப் பணி புரிந்தாலும் முதல் இரு