பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பள்ளியெழுச்சி 255 இது அவன் திருஉரு இவன் அவன் எனவே எங்களை ஆண்டு கொண்டு இங்கு எழுந்தருளும் மது வளர் பொழில் திரு உத்தரகோச மங்கை உள்ளாய் திருப்பெருந்துறை மன்னா எது எமைப் பணி கொளும் ஆறு அது கேட்போம் - எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே 7 இப்பாடலின் முதல் ஒன்றரை அடிகளில் இறைவன் எத்தகையவன் என்பதை அமரரும் அறியார் என்று கூறுகிறார் அடிகளார். 'அமரரும்’ என்பதில் உள்ள உம்மை ஏனைய எவரும் என்ற பொருளையும் உளப்படுத்தி நிற்கின்றது. பழம், அமுது ஆகியவற்றின் சுவை என்பது நுண்மையான ஒன்றாகும். ஆதலின், அறிந்துகொள்வதும் அனுபவிப்பதும் மிக நுண்மையான ஒரு செயலாகும். அவி உணவு உண்டு நுண்ணிய சூக்கும சரீரத்தோடு வாழும் அமரர்கள் மனிதர்களிலும் மேம்பட்டவர்கள் என்று சொல்லப்படுகின்றனர். ஆனால், அந்த அமரர்கள்கூட இறையனுபவம், பழச்சுவை போன்றதா அமுதின் சுவை போன்றதா என்று கூற முடியாதவர்களாக உள்ளனர். கூற முடியாது என்றாலும், அந்த அனுபவம் எளிதாகக் கிடைக்குமா அல்லது அரிதாகக் கிடைக்குமா என்றால், அதனையும் வேறுபடுத்திக் கூற இயலாத அறியாமையுடன் உள்ளனர். - &ᎮᏊ❍ ☾af6ᏈalᏞJ உணர்ந்து அனுபவிப்பது நாவாகிய பொறியின் செயலாகும். ஆதலால், அதனை விட்டுவிட்டு இறைவன் திருவுரு எத்தகையது, அவன் எங்கே உள்ளான் என்ற வினாக்களை எழுப்பினால்கிட, கட்பொறியினாலோ அல்லது அனுமானத்தாலோ அவனை அடையாளம் கண்டுகொண்டு, இது அவன் திருவுரு என்று கூற முடியாதவர்களாக உள்ளனர். திருவுருவை