பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பள்ளியெழுச்சி 263 வேண்டினர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட ஆண்டாண்டு உறைதலும் அறிந்த ஆறே (திருமுருகாற்று 248-9) என்று கூறிச்செல்கிறது. இப்படிப் பல்வேறு வேடங்களில் புகுகின்ற இவன், அடிகளாரின் பழங்குடிலில் எந்த வேடத்தில் புகுந்து எந்த வேடத்தைக் காட்டினான் என்பதை அடிகளார் இதோ பேசுகிறார். முதலாவதாக, திருப்பெருந்துறையில் குருந்த மர நிழலே தான் உறைகின்ற இடம் என்று காட்டினான். அடுத்தபடியாக, துரத்தில் இருந்து பார்த்த அடிகளாருக்குச் ‘செந்தழல் புரை திருமேனி காட்டினான். இன்னும் சற்று அருகில் சென்றவுடன், அந்தண குருநாதர் வேடத்தையும் காட்டினான். ஆகி. அடிகளாரை ஆட்கொள்வதற்கு முன்னர், அவரைப் பொறுத்தமட்டில் அவருடைய பழங்குடிலில் என்ன என்ன நிகழ்ந்தது என்பதை மிக அழகாகக் காட்டி விட்டார். பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூவரும் அவனைச் சென்று காண முயன்று காண முடியவில்லை. அப்படிப்பட்டவன் அடிகளாருக்குத் தானே வந்து காட்சி தந்ததால் அவரால் காண முடிந்தது. 376. விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப் பொருளே உன தொழுப்பு அடியோங்கள் மண்னகத்தே வந்து வாழச் செய்தானே வண் திருப்பெருந்துறையாய் வழி அடியோம் கண் அகத்தே நின்று களிதரு தேனே கடல் அமுதே கரும்பே விரும்பு அடியார் எண் அகத்தாய் உலகுக்கு உயிர் ஆனாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே 9