பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 நண்ணவும்-அணுகவும். கண்ணகத்தேநின்று களிதருதல்கண்ணுட்பாவையாய் மகிழ்ச்சி விளைவித்தல். எண்-எண்ணம். ‘gurrair பழித்து . இம்மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல் (திருவாச. 35) என்பது போன்று முன்னரும் இறைவனுடைய எளிவந்த தன்மையை அடிகளார் பாடியுள்ளார். இங்கும் அதனைக் கூறவந்த அடிகளார், மற்றொரு புதுமையைப் புகுத்துகின்றார். விழுப்பொருளாகிய அவன், தான் இருந்த இடத்திலிருந்தே உயிர்வர்க்கங்களை, குறிப்பாக மனிதர்களை வாழச் செய்திருக்கலாம். அவன் இம் மண்ணுலகில் வந்துதான் அதனைச் செய்ய வேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை. பின்னர் ஏன் வந்தான்? மண்ணுலகில் அற்ப உயிர்களாகிய நம்மை நாடி அவன் வந்ததால் அவனுடைய பெருமையைக் குறைத்து மதிப்பிட முற்படலாமா? அவ்வாறு செய்யின் கிடைக்கும் பொருளின் தரத்தை அறியமுடியாத பைத்தியக்காரர்களாகிவிடுவோம். அதனாலேயே அந்த விழுப்பொருளுக்கு ஒர் இலக்கணம் கூறவந்த அடிகளார், விண்ணகத் தேவர்கள் கூட அவனைக் கண்டார்கள் இல்லை; அவன் இருக்கும் இடத்தை நாடிச் சென்றார்கள் இல்லை. காரணம் அவர்களால் அவனைக் காண முடியாது என்பது ஒன்று, அவனை நாடிச் செல்வதுகூட முடியாது என்பது மற்றொன்று’ என்கிறார். தேவர்களுக்குக் கொடுக்கப்படாத ஒரு சிறப்பை - மண்ணுலகத்தில் உள்ள அடியார்களுக்கு அடிகளார் வழங்குகிறார். தேவர்கள் விண்ணகத் தேவர்களே தவிர, இறைவனுக்கு நெருக்கமானவர்கள் அல்ல. ஆனால் அடியார்க்ளோ எனின் இறைவனுக்கு மிக நெருங்கியவர். கள். தேவர்களினும் பல படிகள் மேம்பட்ட இவர்களை