பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பள்ளியெழுச்சி 265 'உன தொழும்பு அடியோங்கள்’ என்ற சொற்களால் குறிப்பதன் மூலம் இவர்கள் இறைவனுக்கு அணுக்கர்கள் என்பதைக் குறிப்பித்தார் ஆயிற்று. தொழும்பு என்ற சொல் அடியார் கூட்டத்தைக் குறிப்பதோடு இறைவனுக்குச் செய்யும் திருப்பணியையும் குறிக்கும். எனவே, தொழும்பு அடியோங்கள்’ என்ற தொடர் மிகச் சிறப்பானதும், நுண்மையானதுமான ஒரு பொருளை உள்ளடக்கி நிற்கின்றது. எத்தனையோ காரணங்களுக்காக ஒருவரிடம் மற்றொருவர் அடிமையாகலாம். அடிமையாகின்ற மரபு, தமிழகத்தில் மட்டு மல்லாமல் மிகப் பழைய கிரேக்க, ரோமானிய, எகிப்திய நாகரிகங்களில்கூட உண்டு. ஆனால், இந்த அடிமைகள் அனைவரும் பொன்னுக்கோ, பொருளுக்கோ, உணவுக்கோ , வேறு ஏதோ அற்பப் பயன் கருதியோதான் அடிமையாயினர். ஆனால், 'தொழும்பு அடியோங்கள்’ என்று அடிகளார் குறிப்பிடுவது ஒரு புது வகை அடிமைகளை யாகும். மேலே கூறப்பெற்ற பல நாகரிகங்களிலும் காணப்பெறும் அடிமைகள், உடலால் அடிமைகளே அன்றி, எண்ணத்தால் மனத்தால் சிந்தனையால் அடிமைகள் அல்லர். இதற்கு மாறாக, அடிகளார் குறிப்பிடும் அடிமைகள் எண்ணத்தால், மனத்தால், சிந்தனையால் இறைவனுக்கு ஆட்பட்டவர்களே தவிர அவர்கள் உடம்பு சுதந்திரமுடையதாகும். அப்படியானால், இவர்கள் அடிமைகள் ஆனது எவ்வாறு? தொழும்பு இறைப்பணி) செய்தார்களாதலின் இறைவனுக்கு அடிமையாயினர். தேவர்கள் நண்ணவும் மாட்டாத அந்த விழுப்பொருள் மண்ணகத்தே (திருப்பெருந்துறையில்) அடியோங்கள் காணும் வடிவுடன் வந்தது. வந்து என்ன செய்தது