பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 - தெரியுமா? தொழுப்படியோமாகிய எம்மை வாழச் செய்தது. இந்த இடத்தில் ஒரு சிறு ஐயம் தோன்றத்தான் செய்கிறது. இந்தத் தொழும்படியார்கள் யுகாந்த காலமாக, பரம்பரையாக வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள் : அப்படியிருக்க, அடிகளார் காலத்தில் திருப்பெருந்துறையில் வந்து அடியாரை வாழச் செய்தான் என்றால், இதற்கு முன்னர் இருந்த அடியாரை வாழச் செய்தவன் யார்? அடிகளார் காலத்திற்குப் பிற்பட்டு தோன்றப்போகின்ற தொழும்படியார்களை வாழச் செய்யப் போகின்றவன் tւյրrri ? எந்த நிலையிலும், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் உயிர்கள் வாழ்வது அவனருளால்தான். அப்படியிருக்க மண்ணிடை வந்து தொழுப்படியோங்களை வாழச் செய்தவன் என்று கூறுவதன் அடிப்படை என்ன? முதலில் கூறப்பெற்ற உயிர்கள் வாழ்வது, வெந்ததைத் தின்று, வேளை வந்தபொழுது சாகும் விலங்கு வாழ்க்கை யாகும். அவர்கள் வாழ்கின்றார்கள் என்று கூறுவது உபசார வழக்கே ஆகும். இதன் மறுதலையாக, தொழுப்படியோங்கள் தாங்க ளாக வாழவில்லை, அவர்களை விழுப்பொருள் வாழச் செய்கின்றான். அதாவது, அவர்கள் தொழும்படியார்கள் ஆதலின், அவர்கள் உடல், பொருள், ஆவி அனைத்தும் அவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுவிட்டமையால், அவர்கள் வாழ்கின்ற ஒவ்வொரு விநாடியும் எஜமானனுடைய இச்சைப்படியே நடைபெறுகிறது என்க. வாழச்செய்தான் என்ற தொடரின் நுண்மையான பொருள் இதுவேயாகும்.