பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பள்ளியெழுச்சி 267 அடிகளார் காலத்திற்கு முன்னும், எத்தனையோ முறை விழுப்பொருள் மண்ணிடை வந்துள்ளான். ஒவ் வொரு காலத்திலும் திருப்பணி செய்கின்ற அடியார்களை வாழச்செய்துள்ளான். இனி வரப்போகின்ற காலத்திலும் வாழச் செய்யப் போகின்றான் என்பது குறிப்பெச்சம். செய்தானே' என்று இறந்த காலத்தால் கூறினா ரேனும் செய்கின்றவனே, செய்யப்போகின்றவனே என்று முக்காலத்திற்கும் அது பொருந்தி வரும். இக்கருத்துச் சரியானதுதான் என்பதை அடுத்துள்ள 'வழியடியோம், கண்ணகத்தே நின்று களிதரு தேனே' என்ற தொடர் நிறுவுகின்றது. அதாவது, வழியடியோங்கள் என்றதனால் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவந்த, வாழ்ந்துவருகின்ற, வாழப்போகும் அடியார்கள் அனைவரது கண்ணிலும் தேன் போன்று இனிமை பயக்கும் காட்சியை நல்குகிறான் என்றபடி, - விண்ணகத் தேவர்கள் நண்ண முடியாத விழுப்பொருளாகிய அவன் மண்ணகத்தே வந்தான் என்றால், அவன் இப்பொழுது எங்கே உள்ளான்? மண்ணகத்தில் எங்கே எப்பொழுது வந்தான்? இப்பொழுது அங்கே உள்ளானா என்ற வினாக்கள் தோன்றுமன்றோ, அவ்வினாக்களையெல்லாம் எதிர்பார்த்து விரும்படியார் எண்ணகத்தான் என்கிறார். இந்தத் தொடரில், அடியார்கள் நடுநாயகமாக இருக்கிறார்கள். அவர்களது முயற்சியின் நோக்கம் அவனை அடைய வேண்டும் என்பதே ஆகும். மண்ணில், விண்ணில் அவன் எங்கு இருக்கிறான் என்பதை அறிந்துகொள்ள முடியாத இவ்வடியார்கள், அவன் இருக்குமிடம்பற்றிக் கவலைப்படாமல் எப்படியாவது அவனை அடைய வேண்டும் என்று விரும்பினார்கள். விரும்படியார் என்ற வினைத்தொகை முக்காலத்தையும் குறித்து நிற்கின்றது.