பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 w திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 எனவே, இவர்கள் விரும்பத் தொடங்கினால் எங்கே இருந்த அவன், விண்ணையும், மண்ணையும் கடந்து நின்ற அந்த விழுப்பொருளாகிய அவன், என்ன அதிசயம்! இந்த அடியார்களின் எண்ணத்துள் அகப்பட்டுக்கொள்கிறான் அதனையே விரும்பு அடியார் எண்ணகத்தாய்’ என்றார். 377. புவனியில் போய்ப் பிறவாமையின் நாள் நாம் போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு என்று நோக்கி திருப்பெருந்துறை உறைவாய் திருமால் ஆம் அவன் விருப்பு எய்தவும் அலரவன் ஆசைப் படவும் நின் அலர்ந்த மெய்க் கருணையும் நீயும் அவனியில் புகுந்து எமை ஆட் கொள்ள வல்லாய் ஆர் அமுதே பள்ளி எழுந்தருளயே 10 புவனி-பூமி. அவமே-வீணாக. கதிரவனுடைய ஒளிக்கதிர்கள் அவனிடமிருந்து புறப்பட்டு, பல கோடி மைல்கள் தாண்டிப் பூமியை வந்து அடைகின்றன. பூமியில் பட்டவுடன் அதில் உள்ள பொருட்களை ஒளி பெறச் செய்து விளக்குகின்றன. அதுவரை அப்பொருளிடம் காணப்படாத சூட்டையும் அப்பொருட்களிடத்து ஏற்றுகின்றன. ஆனால், இந்த ஒளிக்கற்றை பூமியிலோ, வேறு கிரகங்களிலோ படுவதற்கு முன்னர்ப் பல ஆயிரம் காத தூரம் கடந்து வந்ததே! அந்த இடைவெளியை ஒளிமயமாக ஆக்கிற்றா? இல்லை. அந்த இடைவெளியைச் சூடேற்றியதா? இல்லை. ஒளியேற்றுதலும் சூடேற்றுதலும் கதிரவன் கதிர்களுக்கு இயல்பேயாயினும், பூமியில் வந்து அவை படும்வரை இந்தப் பணியைச் செய்வதில்லை. சூரியக் குடும்பத்தில் இப் பூமியை அல்லாமல் செவ் வாய், புதன், குரு ஆகிய பல கோள்கள் இருக்கின்றனவே.