பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 என்றால் என்ன பொருள்? இதனை அகம், புறம் எனக் கொண்டு வியாப்பியம், வியாபகம் என்றெல்லாம் பொருள் கூறியுள்ளனர். உண்மையில் இதன் பொருளை விளங்கிக்கொள்ள வேண்டுமானால், ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங் களையும் பூப் பக்கம், தலைப் பக்கம்) மனத்துள் கொண்டு வரவேண்டும். நாம், புரிந்துகொள்வதற்கு பூப் பக்கம், தலைப் பக்கம் என்று குறிப்பிடுகின்றோமே தவிர, உண்மையில் இவை இரண்டும் சேர்ந்ததே நாணயமாகும். இவை இரண்டு பக்கங்களையும் தவிர்த்து நாணயம் என்று தனியே இல்லை. நாணயத்திலிருந்து எவ்வாறு ஒரு பக்கத்தைப் பிரித்து எடுக்க முடியாதோ, அதே போன்று சிவத்திலிருந்து சக்தியையும், சக்தியிலிருந்து சிவத்தையும் பிரிக்க முடியாது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். உடையாளும் உடையானும் சிவசக்தி சொரூபமாக உள்ளனர். இறைவன், இறைவி இலக்கணத்தை இவ்வளவு அழகாக எடுத்துக்கூறிய அடிகளார், அந்தச் சிவசக்தி தம்முள்ளே இருக்கின்றது என்பதை எடுத்துக் கூறியுள்ளார். 'இருப்பதானால் என்ற சொல் சற்று வியப்பானதாகும். 'இருப்பது உண்மையானால் என்பது இதன் பொருளாகும். இருப்பது உண்மையானால் என்று, யாரை நோக்கி இந்த வினாவை எழுப்புகின்றார்? தமக்கு அருள் செய்த குருநாதரைப் பார்த்தே, ஐயனே! இறைவன் இறைவி வடிவாக உள்ள நீ என்னுள் இருக்கிறாய் என்பதை அடிக்கடி உணர்கின்றேன். என் சித்தத்துள் நீ புகுந்ததை அடிக்கடி நினைவு கூர்கின்றேன். இருந்தாலும், என்னுள் புகுந்து நீ தங்கியிருப்பது உண்மையானால் அதற்குள் சில நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்க வேண்டும். இதுவரை அவை நடைபெறவில்லையே! அதனால், நீ என்னுள் இருப்பதையும் ஐயப்படுகின்றேன்’ என்ற கருத்தில் நீங்கள் இருவரும் என்னுள் புகுந்திருப்பது உண்மையென்றால்,