பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோயில் மூத்த திருப்பதிகம் : 277 அந்தத் திருப்பெருந்துறையில் நடைபெற்றதைப்போல அடியார் நடுவுள் நானிருக்கும் அருளைப் புரியவேண்டும்’ என்று வேண்டுகிறார். அருளைப் புரியாய்’ என்று கூறி நிறுத்தாமல் 'பொன்னம்பலத்தெம் முடியா முதலே' என்று கூறுவதால் பெருந்துறையில் கோலமார் திருப் பொதுவினில் வருக என்று ஆணையிட்டதை நன்றாக நினைவில் கொண்டே இப்பாடலை அருளிச்செய்கின்றார். அதாவது, பெருந்துறையில் அடியார் நடுவுள் இருக்கும்போதுதானே பொதுவினில் வருக என்று ஆணையிட்டாய்? இதோ இப்பொழுது உன் ஆணைப்படி வந்துவிட்டேன். அதனோடு தொடர்புடைய நடுவுள் இருக்கும் அருளை நீ புரியவேண்டும் என்ற கருத்தைக் கூறுபவர்போலப் புரியாய் என்ற சொல்லுக்குப்பின் பொன்னம்பலம் என்ற சொல்லை வைக்கின்றார். 379. முன் நின்று ஆண்டாய் எனை முன்னம் யானும் அதுவே முயல்வு உற்றுப் பின் நின்று ஏவல் செய்கின்றேன் பிற்பட்டு ஒழிந்தேன் பெம்மானே என் என்று அருள் இவர நின்று போந்திடு என்னாவிடின் அடியார் உன் நின்று இவன் ஆர் என்னாரோ பொன்னம்பலக் கூத்து உகந்தானே 2 முன் நின்று ஆண்டாய்-உருவாக எழுந்தருளி ஆட்கொண்டாய். அதுவே முயலுற்று-அதனையே திரும்பவும் பெற முயன்று. இவர நின்று-மேற்படத் தான் அதனுள் அடங்கியிருந்து. சென்ற பாடலில் கூறப்பெற்ற கருத்தே இங்கும் தொடர்கின்றது. திருப்பெருந்துறையில்கூடக் குருநாதராய் இருந்தவர் அடியார் கூட்டத்திடையே சென்று அமர்க என்று வாய்திறந்து ஆணையிடவில்லை. அவருடைய குறிப்பு, హj}&Fశ}& என்பவற்றால்மட்டுமே அடியார் கூட்டத்தினிடையே அமருமாறு பணித்தார். இடையே