பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 வந்த இவர் யார் என்று அந்த அடியார்கள் அப்பொழுதே கூடக் கேட்டிருப்பார்கள். ஆனால், அவ்வாறு கேட்காமைக்குக் காரணம் குருநாதர் எதிரே அமர்ந்திருந்ததுதான். குருநாதர் அமர்ந்திருக்கும்போது புதிதாக வந்த ஒருவர் தம்மிடையே வந்தார் என்றால், வாய்விட்டுக் கூறாவிடினும் குருநாதர் அதை அனுமதிக்கிறார் என்று நினைந்து வாளா இருந்துவிட்டனர். ஆனால், இப்பொழுது நிலைமை வேறு. இப்பொழுது குருநாதர் நேரடியாக இல்லை. சென்ற பாடலில் அடிகளார் வேண்டிக்கொண்டபடி அவர் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் பொன்னம்பலத்தான் புரிந்தாலும், ஒரு புதிய சிக்கல் தோன்றும் என்று அடிகளார் கருதுகிறார். பொன்னம்பலத்து முழுமுதல், அடியார் நடுவுள் சென்று இருக்கும் அருளைப் புரிந்ததாக வைத்துக் கொண்டால், என்ன நிகழ்ந்திருக்கும்? அடிகளார், அடியார் நடுவுள் புக முயன்றிருப்பார். முன்பின் அறிமுகம் இல்லாத இவரைத் தம்முள் ஒருவராக அவர்கள் எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும்? எனவே, நுழையப்போகும் இவரை நிறுத்தி இவன் யார் என்று கேட்கமாட்டார்களா? இந்த ஐயம் அடிகளார் மனத்தில் வலுவாகத் தோன்றி யவுடன் இந்தச் சிக்கலுக்கு ஒரு வழி காணமுற்படுகிறார். பாடலில் வரும் பெம்மானே’ என்பது முதல் போந்திடு’ என்பதுவரை உள்ள பகுதியை பெம்மானே! அருள் இவர நின்று என் போந்திடுக! என்னாவிடில்’ என்ற முறையில் கொண்டு கூட்டுச் செய்து பொருள் காண்பது நலம். இதன் பொருள், பெம்மானே! உன் அருள் என்பால் இவர (பொருந்த) நின்று (அடியார் கூட்டத்துள் நுழையாமல் ஏன் நின்று விட்டாய் என்று கேட்டுவிட்டு), போந்திடு என்னாவிடில் (உடனே உள்ளே நுழைவாயாக என்று கூறாவிட்டால்' என்றவாறாம். ஐயனே இவர்கள் நடுவே இருக்குமாறு முன்னர் அனுமதித்த நீ இப்பொழுதும்