பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோயில் மூத்த திருப்பதிகம் : 279 எனக்கு அருள் செய்யும் முறையில் அடியார்கள் அனைவரும் அறிந்து கொள்ளுமாறு போந்திடு உள்ளேவரப் புறப்படுவாயாக என்று அருளுவாயாகில் இப்புதியவன் штfr என்ற வினாவை இவர்கள் எழுப்பமாட்டார்கள்', 380. உகந்தானே அன்பு உடை அடிமைக்கு உருகா உள்ளத்து உணர்வு இலியேன் சகம் தான் அறிய முறையிட்டால் தக்க ஆறு அன்று என்னாரோ மகம் தான் செய்து வழி வந்தார் வாழ வாழ்ந்தாய் அடியேற்கு உன் முகம் தான் தாராவிடின் முடிவேன் பொன்னம்பலத்து எம் முழு முதலே 3 சகம்-உலகம். தக்கஆறு-தக்க நெறி. மகம்-யாகம். முகம்தாராவிடின்-கருணை செய்யாவிடின். 'உன்பால் அன்புடைய அடிமையாகிய என்னை உகந்து ஏற்றுக் கொண்டவனே! நீ ஏற்றுக்கொண்ட பின்னரும் உருகா உள்ளத்தை உடையவனாக இருக்கிறேன். உன்னைப்பற்றிய உணர்வு ஒரு சிறிதும் இல்லாதவனாக இருக்கிறேன். இப்படி இருந்தும் உன்பால் அன்புகொண்டு அடிமை செய்ய வேண்டும் என்று முயலத் தொடங்கியவுடன் என்னை உகந்து ஏற்றுக் கொண்டவன் அல்லவா நீ இப்பொழுது நீயும் நின் அடியார் கூட்டமும் என்னை இங்கே விட்டுப் போய்விட்டது நியாயமாகுமா என்று உலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் அறியும்படியாக முறையிடுகின்றேன். இந்த முறையீட்டைக் கேட்பவர்கள் யாரும் இம்முறையீடு நியாயமானதன்று என்று சொல்லமாட்டார்களா? அவர்கள் முறையன்று என்று சொல்வதற்குக் காரணம் என்ன? இந்த அடிமையை நீ உகந்து ஏற்றுக்கொண்ட பின்னரும், என் உள்ளம் உருகவில்லை; உணர்வு நிரம்பவில்லை. ஆதலால்தான் நீ விட்டுச் சென்றாய் என்பதை நன்கு