பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 அறிந்த உலகத்தார் என் முறையீடு நியாயமானதன்று என்று சொல்வதற்கு இடமிருக்காது’ என்கிறார். மூன்றாவது அடியின் பொருள் விளங்குமாறில்லை. 381. முழு முதலே ஐம் புலனுக்கும் மூவர்க்கும் என் தனக்கும் வழி முதலே நின் பழ அடியார் திரள் வான் குழுமிக் கெழு முதலே அருள் தந்து இருக்க இரங்கும் கொல்லோ என்று அழும் அதுவே அன்றி மற்று என் செய்கேன் பொன்னம்பலத்து அரைசே 4 முழுமுதலே-முதற்காரணனே. வழி முதல் - நிமித்த காரணன். கெழுமுதல்-நிறைவாகப் பொருந்துகின்ற முதல்வனே. - 'அரி, அயன், உருத்திரன் என்று மூவர்க்கும் முதல்வனாய் நின்றவனே! ஐம்பூதங்கள் தொடங்கி எல்லாவற்றிற்கும் முதற்காரணமாய் உள்ளவனே! எனக்கும் வழிவழியான என் முன்னோர்க்கும் மூலப்பொருளாய் உள்ளவனே!" ‘இன்றுவரை நின்னால் ஆட்கொள்ளப்பெற்ற பழவடியார்கள் அனைவருக்கும் உன்னுடைய அருளை நிறைவாக (கெழுமுதல்) நீ தந்திருக்க, அதனை அனுபவித்துக் கொண்டு வானிடைக் குழுமிள்ளயுள்ளனர். அவர்கள் அவ்வாறு இருக்கையில், தின் அருளைப் பெற்று அவர்களோடு கூடமுடியாத நான், இந்த உலகிடை அமர்ந்துகொண்டு என்றாவது ஒரு நாள் எனக்கும் நீ இரங்குவாயோ என்று அழுவது தவிர வேறு என்ன செய்யமுடியும்’ என்றபடி, 382. அரைசே பொன்னம்பலத்து ஆடும் அமுதே என்று உன் அருள் நோக்கி இரை தேர் கொக்கு ஒத்து இரவு பகல்