பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 கோயில் மூத்த திருப்பதிகம் 281 ஏசற்று இருந்தே வேசற்றேன் கரை சேர் அடியார் களி சிறப்பக் காட்சி கொடுத்து உன் அடியேன்பால் பிரை சேர் பாலின் நெய் போலப் பேசாது இருந்தால் ஏசாரோ 5 ஏசற்று-வருந்தி. வேசற்றேன்-வாடினேன். கரை-முத்தி. பிரைசேர் பாலில் நெய் என்றது வெளிப்பட்டும் வெளிப்படாதிருக்கும் நிலையை. இரைதேர் கொக்கு, ஒரு காலைத் தூக்கிக்கொண்டு, ஆடாது அசையாது, தனக்கு உணவாக மீன் எப்போது தன்பால் வரும் என்று நிற்கும் நிலையைக் குறித்தவாறு!. மீன் தன் திசையில் வருவதை நோக்கிக் கொக்கு காத்தி ருப்பது போல் இறைவன் திருவருள் தம்மாட்டு எப்போது வரும் என்று காத்துக்கொண்டிருக்கும் நிலையைப் பேசுகிறார் அடிகளார். பல சமயங்களில் காலை நேரத்தில் நிற்கத் தொடங்கிய கொக்கு, மாலைவரை ஒரு மீன்கூடத் தன்பால் வாராமையின் உடலும் மனமும் நொந்து வாடுவதுபோல உன் திருவருள் என்பால் வாராமையின் உள்ளம் நொந்து (ஏசற்று) உடல் தளர்ந்தேன்வேசற்றேன்) என்கிறார். . ‘ஐயனே! பிறவிக்கடலை நீந்தி உன் திருவடியாகிய கரையை அடைந்த அடியார்க்கு வெளிப்பட்டுக் காட்சி தந்தாய். அதன் பயனாக அவர்கள் உள்ளம் களி சிறந்தது. ஆனால், அடியேனாகிய என்னைப் பொறுத்தவரையில் நீ வெளிப்பட்டபாடில்லை. அந்த அடியார்களைப் பொறுத்த மட்டில் வெளிப்பட்டுக் காட்சி தந்த நீ, என்னைப் பொறுத்தவரை பிரைசேர் பாலின் நெய்போல வெளிப் படாமல் உள்ளாய், எல்லா உயிர்களினுள்ளும் அந்தர்யாமியாய், பாலின் நெய்போல நீ மறைந்து உறைகின்றாய். உன்னை வெளியே கொணர்வதற்கு உன் திருவருளாகிய பிரைமோர் தேவைப் படுகின்றது. என்னைப் பொறுத்தவரையில் திருப்பெருந்