பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 மூக்கணாங்கயிறைப் பிடித்து ஒட்டுபவர் இல்லாத மாடு போல் ஆகிவிட்டேன். - 'இதன் பயனாக அன்று அருள் செய்த நீ மறைந்து விட்டாலும், அம்பலக்கூத்தன் இன்றில்லாவிடினும் நாளை முன்போல் இரங்கி நமக்கருள்செய்வான் என்று அன்றாடம் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து நிற்கின்றேன். ‘ஐயனே! அடியார்களும், நீயும் நெருங்கி இருக்கும். முன்றிலில், நானும் வரலாம் என்று ஆணையிடுவாய் என்று எதிர்பார்த்து நிற்கின்றேன்' என்றவாறு. இது பழைய திருப்பெருந்துறை நிகழ்ச்சியையே நினைவுகூர்ந்து பாடியதாகும். ஆள்வார் இலி மாடு என்பதனைக் கொண்டிக் காளை என்று இக்காலத்தார் கூறுவர். அதாவது, மூக்கணாங் கயிற்றைப் பிடித்து வழிநடத்தும் தலைவனின்மையால் தன் விருப்பம்போல் சுற்றித்திரியும் காளையையே குறிப்பிடுகின்றார். இப்பொருளை விட்டுவிட்டு மாடு” என்பதற்கு செல்வம் என்று பொருள்கொண்டால் இந்த உவமை சிறப்பை இழந்து நிற்பதைக் காணலாம். 385. அருளாது ஒழிந்தால் அடியேனை அஞ்சேல் என்பார் ஆர் இங்கு பொருளா என்னைப் புகுந்து ஆண்ட பொன்னே பொன்னம்பலக் கூத்தா மருள் ஆர் மனத்தோடு உனைப் பிரிந்து வருந்துவேனை வா என்று உன் தெருள் ஆர் கூட்டம் காட்டாயேல் செத்தே போனால் சிரியாரோ 8 மருள்-வாசனையால் விளைந்த மயக்கம். தெருள் ஆர் கூட்டம்தெளிவுடைய அன்பர்கள் கூட்டம்.