பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோயில் மூத்த திருப்பதிகம் 283 'இந்த ஏச்சுக்கள் வாராமல் இருக்க ஒரே ஒரு வழிதான் உண்டு. பொன்னம்பலத்தில் ஒளிவடிவாய் இருப்பவனே! அடியார்கள் சூழ்ந்திருப்ப, நடுவே கொலு வீற்றிருக்கும் உன்னிடம் என்னை வருமாறு பணிக்கும் வழி ஒன்றுதான் அது. இனியாவது என்பால் இரக்கம் கொண்டு அதனை நீ செய்யவேண்டும்’ என்றவாறு. - 384. இரங்கும் நமக்கு அம்பலக் கூத்தன் என்று என்று ஏமாந்திருப்பேனை அரும் கற்பனை கற்பித்து ஆண்டாய் ஆள்வார் இலி மாடு ஆவேனோ நெருங்கும் அடியார்களும் நீயும் நின்று நிலாவி விளையாடும் மருங்கே சார்ந்து வர எங்கள் வாழ்வே வா என்று அருளாயே 7 என்றென்றும்-பலகாலும் எண்ணி, அருங் கற்பனை-இல்லாத கற்பனை. ஆள்வார் இலி மாடு-உடையவன் அற்ற ஊர் மாடு. நிலாவிឍា៩. - ‘எங்கள் வாழ்வுக்கு முதலாகிய பெருமானே முன்னர்த் திருப்பெருந்துறையில் சாதாரண மனித்ர்களுக்குரிய, மனத்தில் தோன்றும் சராசரிக் கற்பனைகளோடு உன்னை நெருங்கினேன். ஒரே விநாடியில் என் மனத்தில் இருந்த ப்ழைய கற்பனைகள் போக, இறையனுபவம் ஆகிய அரிய புதிய கற்பனைகள் (புதிய சிந்தனைகள்) மனத்தில் தோன்றுமாறு செய்து, என்னை ஆட்கொண்டாய். ‘என்பால் தோன்றிய அருங்கற்பனைகளைச் செம்மை யான வழியினில் செலுத்த அப்பொழுது நீ என்னுடன் இருந்தாய். அந்தப் புதிய கற்பனைகள் தோன்றியவுடன், எல்லையற்ற பெருமிதம் கொண்டேன் நான். ஆனால், திடீரென்று நீ மறைந்துவிட்டாய். கற்பனைகள் என்பால் நின்றுவிட்டன; அவற்றை வழிநடத்தும் நீ இங்கில்லை.