பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 நிற்கும் சமாதி நிலையாகும். பிறர் அனுபவத்தைக் கேட்டு அதை மெச்சிய மூன்று நிலையில் உள்ளவர்களும் இப்பொழுது நான்காவது நிலையாகிய சமாதி நிலையை அடையத் தனியிடத்தை நாடிச் செல்கின்றனர். தனியே இருந்து இறைவனுடைய திருப்பெயரைத் தமக்குள்ளேயே சொல்லி மகிழ்கின்றனர். - அப்படியானால், - சிரித்தல் முதலிய செயல்களில் ஈடுபட்டுப் பின்னர்த் தம்முள் ஒன்றுகூடித் திருவார்த்தை விரித்தவர்கள் எதனை விரித்தர்ர்கள். திருவார்த்தை என்ற சொல்லில் அவரவர் பெற்ற அனுபவத்தோடு இறைவனு டைய நாமமும் அடங்காதா? அப்படி அடங்குமென்றால் திருவார்த்தை விரிப்பார் என்று கூறியதன் பின்னர் உன் நாமம் தரிப்பார் என்று கூறியதன் நோக்கம் என்ன? சற்று ஆழ்ந்து சிந்தித்தால், மிக மிக நுண்மையான ஒரு கருத்தை அடிகளார். இங்கே கூறுகிறார் என்பதை விளங்கிக் கொள்ள முடியும். இறைவனுக்கு ஆயிரம் திருநாமங்கள் உண்டு. நின்னிற் சிறந்தவை நின் நாமங்கள்’ என்று ஒரு பழம் பாடல் பேசுகின்றது. இந்த நாமங்கள் அனைத்துமே மந்திரங்கள் என்ற பொதுத்தலைப்பில் அடங்கும். ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு தனி ஒலி அதிர்வு (vibration) உண்டு. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துக்கள் சேர்ந்து மந்திரம் ஆகும்பொழுது இந்த மந்திரத்தின் ஒலி அதிர்வு அதனுள் இருக்கும் தனித்தனி எழுத்துக்களின் ஒலி அதிர்வுச் சேர்க்கையாக மட்டும் இல்லாமல் புதியதொரு ஒலி அதிர்வைப் பெறுகின்றது. இந்த புதிய ஒலி அதிர்வுதான் மந்திரத்தின் சக்திக்கு ஆதாரம் ஆகும். ஆயிரம் திருப்பெயர்களும், தனித்தனி மந்திரங்களாக ஆகும்பொழுது, ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் இருக்கும். பலர் ஒன்றுகூடி ஒரு மந்திரத்தை ஒன்றாக உச்சரிக்கும்பொழுது தோன்றுகின்ற அதிர்வெண்