பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோயில் மூத்த திருப்பதிகம் 289 அக்கூட்டத்திலுள்ள அனைவருக்கும் ஒரேமாதிரியான பயனைத் தரும் என்று சொல்வதற்கில்லை. ஒவ்வொருவருடைய மனநிலையிலும் சில குறிப்பிட்ட ஒலி அதிர்வுகள் (vibration) ஒரளவு தாக்கம், பெருந்தாக்கம் என்பவற்றை ஏற்படுத்தலாம். எந்த மந்திரம் ஒருவருக்குப் பெருந்தாக்கத்தை ஏற்படுத்துகின்றதோ, அதுவே அவருக்குரிய மந்திரமாகும். இதனை நன்கறிந்தவர்கள் கூட்டமாகத் திரண்டு நின்று ஒரு சில மந்திரங்களைச் சொல்லியவுடன் பிரிந்து சென்று தனியே இருந்து கொண்டு தம்முடைய மன அதிர்வுகளுக்கு ஏற்ப, பொருத்தமான அதிர்வு எண்களை உடைய மந்திரத்தைத் தேர்ந்தெடுத்து அதை ஜெபிப்பார்கள். அதனைத்தான் அடிகளார் வெவ்வேறு இருந்து உன் திருநாமம் தரிப்பார்’ என்கிறார். முதல் இரண்டு அடிகளில் சொல்லப்பெற்றவை தியானம், ஜெபம் என்பவற்றின் வளர்ச்சி முறையில் படிப்படியாகச் சென்று ஒரு உச்சகட்டத்தை அடைவதைக் குறிக்கின்றன. இந்த நிலை அடைந்த பிறகு அதே நிலையில் எவ்வளவு காலம் இருந்தாலும் அதிலிருந்து கீழே இறங்கித்தான் ஆகவேண்டும். பருஉடலுன் வாழும் மனித மனத்திற்குரிய இயல்பாகும் இது. . இவ்வடியார் கூட்டத்தினர், பொன்னம்பலத்து ஆடும் பெருமானின் உருவத்தில் ஈடுபடுகின்றனர். அந்த உருவத்தில் லயித்து, அதன் பின்னர் அந்த உருவத்தின் மூலமாகிய ஒலிவடித்தில் ஈடுபடுகின்றனர். அந்த ஒலி, மந்திர சொரூபம் ஆதலால் பின்னர் அந்த மந்திரத்தில் லயித்துவிட்டனர். இதுவே தியானத்தின் வளர்ச்சியில் சோபான முறையாகும். இனி, மேல்நிலையில் லயித்தவர்கள் சாதாரண நிலைக்குத் திரும்பும்பொழுது தோன்றும் காட்சி பொன்னம்பலத்தாடும் புனிதனின் காட்சி ஆகும். அது