பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 ஏன்? பொன்னம்பலத்தாடும் புனிதனின் காட்சியில்தானே இவர்கள் தொடங்கினார்கள்? அதில் தொடங்கப்பட்ட பயணம், வெவ்வேறாக இருந்து இறைவன் திருநாமங்களை ஜெபித்த பிறகு புறப்பட்ட இடத்திற்கே மீள்கின்றது. புறப்பட்ட பொழுது கடைசிக் காட்சியாக இருந்தது, பொன்னம்பலத்தாடும் புனிதனின் வடிவமாகும். இப்பொழுது மீண்டுவருகையில் அதுவே முதற்காட்சியாக வருகிறது. ஆதலால்தான் திரு நாமம் தரிப்பார் என்று கூறிய அடிகளார், 'பொன்னம் பலத்தாடும் தலைவா’ என்பார் என்று கூறி முடிக்கின்றார். இக்காட்சி, அடிகளார் மனத்திரையில் விரிவாக ஒடிய காட்சியாகும் சிரிப்பார், களிப்பார் முதலியவர்களை மனத் திரையில் காண்கின்ற அதே நேரத்தில் அவர்களிடையே தாமும் ஒருவராக இராமல் காண்பானாகமட்டும் இருப்பதை உணர்ந்த அடிகளார், தம் நிலைக்குப் பெரிதும் வருந்துகிறார். இவ்வற்புதக் காட்சியைக் காண்பது வேறு; அற்புதக் காட்சியில் தாம் ஒருவராகப் பங்கேற்பது வேறு. பங்கேற்க முடியாமல் காண்பானாகமட்டும் இருப்பதால் நரிப்பாய் நாயேன் இருப்பேனோ என்று வருந்துகிறார். காண்பான் நிலையில் இருந்து, காணப்பெறும் கூட்டத்தில் தாமும் ஒருவராக மாறவேண்டுமானால் அது தம் முயற்சியில் அடையக்கூடிய ஒன்று அன்று என்பதை உணர்ந்த அடிகளார், அந்த நிலையைத் தமக்கு இனியாவது அருள வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள் கிறார். அந்த வேண்டுகோள்தான் நம்பி! இனித்தான் நல்காயே’ என்ற சொற்களாக வெளிப்படுகின்றன. 387. நல்காது ஒழியான் நமக்கு என்று உன் நாமம் பிதற்றி நயன நீர் மல்கா வாழ்த்தா வாய் குழறா வணங்கா மனத்தால் நினைந்து உருகிப்