பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோயில் மூத்த திருப்பதிகம் 291 பல்கால் உன்னைப் பாவித்துப் பரவிப் பொன்னம்பலம் என்றே ஒல்கா நிற்கும் உயிர்க்கு இரங்கி அருளாய் என்னை உடையானே 10 நல்காது-அருளைக்கொடாது. ஒல்கா-தளர்ந்து. சென்ற மூன்று, நான்கு பாடல்களில் அடியார் கூட்டத்திலே தன்னைப் புகுவிக்க வேண்டும் என்று பாடிய அடிகளார், அது நடவாமற் போகவே, மிகுந்த கழிவிரக்கத்தேடு தம் நிலைமையை மூன்று அடிகளில் பேசுகிறார். இந்த நிலையில் ஒரு உயிர் துன்புற்று வாடுமேயானால் எத்தகையவர்களும் அதன்மாட்டு இரக்கம் கொள்ளாமல் இருக்க முடியாது. உலகியலில் ஈடுபட்டுத் தம்மையே பெரிதென மதிக்கும் மனிதர்கள்கூட, இந்த நிலை கண்டு இரங்குவார்கள் எனின், அப்படி வருந்துகின்ற உயிர்களைக் கண்டு கருணைக் கடலான இறைவன் இரங்காமல் இருக்கமாட்டான். இந்த உறுதிப்பாடு மனத்தில் வரவே, அது Î.}ff"|_{it}f}"&#5 வெளிப்படுகின்றது. இறைவனுடைய நாமத்தை இரவு, பகல் எந்நேரமும் எந்த மனநிலையிலும் விடாமல் கூறிக்கொண்டிருப்பதால் 'பிதற்றி என்றார். இதனையே சுந்தரமூர்த்தி சுவாமிகள் 'வழுக்கி விழினும் உன் திருப்பெயர் அல்லால் மற்று நான் அறியேன் மறுமாற்றம் (திருமுறை: 7-54-1 என்று பாடுகின்றார். மணிவாசகர் பிதற்றுகின்ற நிலையிலும் சுந்தரர் வழுக்கி விழும்போது சொல்லுகின்ற நிலையிலும் பேசப்பெறுபவை மனம் மொழி மெய் என்ற மூன்றிலும் நிறைந்து, அந்தக்கரணங்களிலும் நிறைந்து ஆழ்ந்துள்ள பக்தியிலிருந்து வெளிப்படும் சொற்களாகும். இது வெறும் பயிற்சியால் வருவது ஒன்றன்று. இவ்வாறு பிதற்றுவதற்கு மனத்தில் ஏதோவொரு நம்பிக்கை இருத்தல் வேண்டும். அதனையே நல்காதொழியான் நமக்கு என்ற சொற்களின் மூலம் அடிகளார் வெளிப்படுத்துகிறார்.