பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 பிதற்றுதல் என்று கூறியவுடன் உதட்டளவில் பேசப்படும் சொற்கள் என்று சாதாரணமாகப் பொருள் செய்துவிடுவோம். ஆனால், அடிகளாரின் இந்தப் பிதற்றலின் பின்னர் ஒர் ஆழமான உணர்ச்சிப் போராட்டம் உள்ளது என்பதைத் தெரிவிக்க நயன நீர் மல்கா என்று குறிப்பிடுகின்றார். உள்ளத்து உணர்ச்சியின் பயனாக வெளிப்படுவது நயன நீர் வாழ்த்தலும், வாய்குழறலும் உணர்ச்சிப் பெருக்கின் விளைவே ஆகும். இனி, இந்த உணர்ச்சிப் பெருக்கின் விளைவுகள் ஏதோ ஒரு நேரம் வந்து பின்னர் மறைந்துவிடுபவை அல்ல என்பதைக் குறிக்கப் பல்கால் உன்னைப் பரவிப் பாவித்து' என்கிறார். - 'உயிர்க்கிரங்கி அருளாய் என்பதில் அடிகளாரின் மனவேதனை நன்கு வெளிப்படுகின்றது. எனக்கு இரங்கி அருளாய் என்றுதான் கூறியிருக்கவேண்டும். அவ்வாறு கூறினால் தன்முனைப்புத் தலைகாட்டிவிடும் என்று அஞ்சினார் போலும்!. அன்றியும் எனக்கு இரங்காய்' என்று கூறுவதைவிட, 'உயிர்க்கு இரங்கி அருளாய்' என்று படர்க் கையில் கூறுவது அந்த எளிமையைப் பல மடங்கு அதிகப் படுத்திக் காட்டுகின்றது. முன்னர் நான்கு பாடல்களில் அடியார் கூட்டத்துள் இருக்கும் அருளைப் புரிய வேண்டும் என்று பன்னிப் பன்னிக் கேட்டார் அடிகளார். அது கிடைக்காமல் போகவே கழிவிரக்கம் காரணமாகத் தம் எளிமையையும், செயற்பாட்டையும் வரிசைப்படுத்திப் பேசுகிறார். இன்னது வேண்டும் என்று கேட்காமல், இப்படி வருந்தும் உயிருக்கு நீ இரக்கம் காட்டியே தீரவேண்டும் என்று மன்றாடுவது போல இப்பத்தாவது பாடலை முடிக்கின்றார். ওঁ ওঁ ওঁb