பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோயில் திருப்பதிகம் 305 391. உணர்ந்த மா முனிவர் உம்பரோடு ஒழிந்தார் உணர்வுக்கும் தெரிவு அரும் பொருளே இணங்கு இலி எல்லா உயிர்கட்கும் உயிரே எனைப் பிறப்பு அறுக்கும் எம் மருந்தே திணிந்தது ஒர் இருளில் தெளிந்த து ஒளியே திருப்பெருந்துறை உறை சிவனே குணங்கள் தாம் இல்லா இன்பமே உன்னைக் குறுகினேற்கு இனி என்ன குறையே 4 உம்பரோடு-தேவர்களோடு. குணங்கள்-சாத்து விகம் இராசதம் தாமதம் என்பன. இந்தப்பாடலின் முதலடியில் உணர்ந்த மாமுனிவர், உம்பர், ஏனையோர், என்ற மூன்றுவகைப்பட்டவரை அடிகளார். இங்கே குறித்துள்ளதற்கு ஒரு காரணம் உண்டு. முனிவர்கள் இவ்வுலகிடை வாழ்பவர்கள், உம்பர்கள் வேறு உலகங்களில் வாழ்பவர்கள். ஒழிந்தோர் என்பது தேவர் உலகத்தல்லாது வேறு உலகங்களில் வாழ்பவர்கள் என்ற பொருளைத் தரும். இத்தொகுதியில் முனிவர்கள் மட்டுமே இவ்வுலகிடை வாழ்பவர்களாதலின் உலகியல் பற்றிய அறிதல் உணர்தல் ஆகிய இரண்டும் அவர்களுக்கு மட்டுமே உரியன ஆயின. வெறும் கல்வியறிவு உடையவராயிருப்பின் அவர்களை அறிந்த மாமுனிவர் என்று அடிகளார் கூறியிருப்பார். அவ்வாறில்லாமல் 'உணர்ந்த மாமுனிவர் என்றதால் கற்று, அதன் பயனை உணர்ந்து வாழ்கின்ற முனிவர் என்பது பொருளாயிற்று. இந்த முனிவர்களுக்குரிய உணர்வு, சென்ற பாடலில் குறிக்கப்பட்ட மூன்று உணர்வுகளில் முதல் உணர்வையே குறித்துநின்றது. பொறி, புலன்கள் நான் ஆகியவற்றோடு தொடர்புடைய எல்லா உணர்வுகளையும், உணர்ந்து ஒரளவு அதனோடு வாழ்ந்து, பிறகு அவற்றைத் தேவையில்லை என்று ஒதுக்கிய முனிவர்கள் ஆவர்