பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 இவர்கள். வெறும் கல்விமட்டும் இருப்பின் இவர்கள் உணர்ச்சிகளை அடக்கி, முனிவர்களாகி இருக்க முடியாது மனிதர்களுக்குரிய பல்வேறு உணர்ச்சிகளையும் கொண்டு வாழ்ந்து, இவ்வுணர்ச்சிகள் தம்மை முன்னேறவிடமாட்டா என்பதை உணர்ந்து, அறிவு, உணர்வு ஆகியவற்றிலிருந்து ஒதுங்கி நிற்கும் முனிவர்களையே உணர்ந்த மாமுனிவர்" என்ற இறந்த காலப் பெயரெச்சத்தால் அடிகளார் குறிப்பிட்டார். இங்கு கூறப்பெற்ற மூவகையினரும் ஒர் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் ஆதலின் அவர்களின் உணர்வுக்காவது கட்டுப்படுவானா என்ற வினாவை எழுப்பிக்கொண்டு 'உணர்விற்கும் தெரிவு அரும் பொருளே' என்றார். இணங்கிலி என்ற சொல் சற்றுப் புதுமையான பிரயோகம் ஆகும். இப்படிப்பட்ட பல புதுப்பிரயோகங் களைத் திருவாசகத்தில் காணலாம். எல்லாப் பொருளிலும் ஊடுருவியும் கடந்தும் நிற்பவன் என்றாலும் அந்தப் பொருளைத் தனதாகப் பாவித்து அதனோடு இணக்கம் கொண்டு ஒன்றாய் இருப்பவன் அல்லன் என்ற கருத்தையும் இணங்கிலி என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். பொருள்கள் அனைத்தும் தோற்றம், இருப்பு, மறைவு என்று மூன்று நிலைகளை உடையன. அப்பொருள்களோடு கூடிக் கலந்து நிற்கும் அவன் அவை தோன்றும் காலத்தில் அவற்றோடு தோன்றுவதில்லை அவை மறையும் காலத்தில் அவற்றோடு மறைவதில்லை. எனவே எந்தப் பொருளோடும் முழுவதுமாக இணங்கியிருப்பவன் அல்லன் என்ற கருத்தையே இணங்கிலி என்ற சொல்லால் பெற வைக்கிறார். i o பொதுவாக ஒளியும் இருளும் முரண்பட்டவை என்பதை நாம் அறிவோம். ஒளி உள்ள இடத்தில் இருளும்