பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 337 கோத்தும்பியின் முதல் பாடலில் தேவர்களும், மாலும் அயனும் காணமுடியாத திருவடியை உடையவன் என்று அவன் பெருமையை அவ்வளவு உயர்த்திக் கூறிய பிறகு, வண்டுக்கும்- ஏன், மனிதர்களுக்கும்கூட ஒரு சோர்வும் தொய்வும் ஏற்பட்டுவிடும். எங்கோ இருக்கும் இந்தப் பொருளிடத்து எவ்வளவு தேன் இருந்தாலும், அதனைப் பெறவேண்டும் என்ற ஆசை எவ்வளவு இருந்தாலும், அதனிடம் செல்வது எவ்வாறு? செல்வதில் வரக்கூடிய துன்பத்தை நினைத்தவுடன் சோர்வு மிகுதிப்பட்டு விடுகிறது. அந்த நிலையில் அவனுடைய எளிவந்த கருணையை ஆறு பாடல்களில் மிக விரிவாகப் பேசுகிறார் அடிகளார். இருபது பாடல்கள் கொண்ட இத்தொகுப்பில் ஆறு பாடல்களில் அதாவது 218, 223, 224, 225, 227, 230 ஆகிய பாடல்களில் அவன் கருணையைக் குறிப்பிடுவதன் நோக்கமென்ன? மனம் தளரத் தேவையில்லை. அவனை நோக்கிப் புறப்பட்டால், அதுவே போதும். அவன் கருணை உன்னை நோக்கிப் பாய்ந்துவரும் என்ற கருத்தைப் பெறவைக்கவே ஆறு இடங்களில் கருணையைப் பற்றிப் பேசினார். உள்ளப்படாத திருவுருவை உள்ளத் தொடங்கிய உடனேயே (திருவாச:230) அவன் கருணை வந்து பாய்ந்தது என்கிறார். ஐந்தறிவு உடையதாகிய வண்டிற்குக் கலக்கமும் அதிகமில்லை; சித்தமோ சித்த விகாரமோ இல்லை. ஆகவே, வண்டைப் பார்த்துப் பேசத் தொடங்கிய அடிகளார், மக்களை நினைந்து பேசுகிறார். வைத்த நிதி பெண்டிர் மக்கள்’ என்பவரிடையே வாழ்வதால் தோன்றும் கலக்கம் ஒரு புறம்; அறிவு, தெளிவைத் தருமென்று நினைத்துக் கற்ற, கல்வி தந்த கலக்கம் ஒருபுறம்; ஒருவருக்கொருவர் மாறுபட்ட இயல்புடைய மக்கள் வாழும் இவ்வுலகில் ஒவ்வொருவரும் தாங்கள்