பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 , திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 229ஆம் பாடலில் தேன் உந்து சேவடி என்றும், 231ஆம் பாடலில் செய்யார் மலரடிக்கே என்றும் பாடுவதைக் காணலாம். தேன் உந்து சேவடி என்றும், தேனார் கமலம் என்றும், மலரடி என்றும் கூறி, வண்டு விருப்பத்தோடு சென்று சேர்வதற்குரிய இடம் அத்திருவடியே என்று வண்டுக்கு வழிகாட்டிய அடிகளார், அத்திருவடிக்கண் செல்வதால் கிடைக்கக்கூடிய உடனடிப் பயன், நீண்டகாலப் பயன் என்ற இரண்டையும் சில பாடல்களில் அமைத்துக் காட்டுகிறார். இதுவரை ஒரு சிறுபகுதித் தேனைச் சேகரிப்பதற்குப் பலப்பல பூக்களில் சென்று சேகரிக்க வேண்டியுள்ளது. அவ்வாறில்லாமல் ஒரே மலரில் அவ்வளவு தேனும் கிடைக்கக்கூடுமாயின் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று வண்டு நினைக்கலாம் அல்லவா? அதற்காகவே 'தினைத்தனை' என்று தொடங்கும் பாடலில் நினைத் தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும் ஆனந்தத் தேன்சொரியும் (217) என்று பாடுகிறார். அத்தோடு நில்லாமல் வண்டு உண்ணும் தேனுக்கும் திருவடியில் கிடைக்கும் தேனுக்கும் ஒரு மாபெரும் வேறுபாடு உண்டு என்றும் கூறுகிறார். வண்டு உண்னும் தேன் நாவிற்கு ருசியாய் அமைவதோடு, அதன் பசியையும் போக்கிற்று. ஆனால், நாவிற்பட்ட ருசி அந்த நாவைக் கடக்கும்போதே முடிந்துவிட்டது. இத்தகைய தேனை உண்டதில் ஏற்பட்ட இன்பம் நாவளவில் நின்று, சில விநாடிகளில் மறைந்தும்விட்டது. ஆனால் திருவடித் தேன், எப்போதும் உடம்பிலுள்ள என்பை யெல்லாம் உள்ளே குளிர்வித்து, மென்மைத் தன்மையடையும் இன்பத்தைத் தரவல்லது. எனவே, வண்டே! அதனை உண்பாயாக' என்கிறார்.