பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 335 நுணுக்கம் அமைந்துள்ளது. அந்தத் திருவடி எத்தகையது என்பதைப் பாடலின் முதல் மூன்று அடிகள் பேசுகின்றன. இந்திரன் முதல் நாரணன் வரை உள்ள அனைவரும் அபெளர்ஷேயம் என்று சொல்லப்படுகின்ற வேதங்களும் அறியாச் சேவடி என்றார். இவர்கள் அனைவருமே அறிந்திராத சேவடியைத் தான் எவ்வாறு கண்டுபிடிக்க முடியும் என்று வண்டு ஐயுற்றுக் கேட்குமாயின், அதற்கு மனத் தென்பு தருகின்ற முறையில் சே அடி என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். பூக்களின் மணம் நிறம் என்பவற்றைத் துரத்திலிருந்து கண்டுகொண்டே, வண்டு அதன்பால் செல்லும் இயல்புடையது. ஆதலின், சே அடி என்றார். அத்திருவடி சிவந்த நிறமுடையது ஆதலின் மிக எளிதாகக் அடையாளம் கண்டுகொள்ளலாம் என்ற கருத்து, குறிப்பாக வைக்கப்பெற்றுள்ளது. அத்தோடன்றி அத்திருவடிக்குத் தேஜசும் உண்டாதலின் இன்னும் எளிதாகக் காணலாம் என்ற கருத்தில் 'தேயுற்ற செல்வர்க்கே ஊதாய் (224) என்றும் கூறினார். சேவடிக்குச் சென்று தாய் என்று கூறிய அடிகளார், அடுத்து வண்டின் இயல்பை நினைக்கின்றார். சிவந்த நிறம் மட்டும் வண்டைத் திருப்திப்படுத்தாது. ஆதலின், மகிழ்ந்து விரும்பும் மலரையும் தேனையும் இணைத்து 216ஆம் பாடலில் ’தேனார் கமலமே சென்று தாய்’ என்றார். அடியார்களுக்கும் வண்டுக்கும் ஒரு பொதுத்தன்மை உண்டு. சிந்தையில் எவ்வளவு அன்பு நிறைந்திருந்தாலும் தங்கள் அன்பு நிறைவுடையதன்று என்றே அடியார்கள் நினைந்து வருந்துவர். இந்த அடிப்படையில்தான் 'கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை (திருவாச:218) என்று பேசுகிறார் அடிகளார். இதேபோல எவ்வளவு,தேன் குடித்தாலும் வண்டுகளுக்குத் திருப்தி ஏற்படுவதில்லை. எனவே, தேன் ஆர் கமலம் என்றிங்குப் பாடிய அடிகளார்,