பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 எட்டிப் பிடிக்கும் முறையில் ரீங்காரமிடுதலைப் பலரும் கேட்டிருக்கலாம். மிக உயரத்தில் ரீங்காரமிடும் தும்பியைக் கண்ணால் காண்பது கடினம். அதேபோல மிக அற்புதமாக இசைபாடும் குயிலையும் கண்ணால் காண்பது கடினம். காரணம், உயர்ந்த மரக்கிளையில் கரிய நிறத்தோடு அமர்ந்துகொண்டிருக்கும் அதனைக் காண்பது கடினம். இவ்விரண்டையும் காணாவிட்டாலும் அவற்றின் இசை அடிகளார் மனத்தைத் தொடுகின்றது. ஷட்ஜத்தில் தொடங்கி நிஷாதம் வரை அனாயாசமாக ஆரோகண கதியில் பாடும் வண்டு, தான் கருதிய பொருளைக் காண முடியவில்லையே என்று வருந்தி அலறுவதுபோல் அடிகளார் மனத்தில் பட்டிருக்க வேண்டும். காதலனுக்கு, காண்பதெல்லாம் அவள் நினைவை உண்டாக்குவதுபோல அடிகளார் மனத்தை இது தொடுகிறது. அவரும் குருநாதரைத் தேடும் பணியில் "தெருவுதோறு அலறிலை பிண நெஞ்சே (திருவாச. 35) என்று வருந்துகிறார் அல்லவா? அலறிக்கொண்டே அவனைத் தேடிச்செல்ல வேண்டும் என்பது அடிகளாரின் விருப்பம். ஆனால், தாம் அலறவில்லை. தம்மையொத்த மற்றோர் உயிர் இதோ மேலே அலறிக்கொண்டு செல்கிறது. எனவே தும்பியின் ரீங்காரத்தைக் கேட்ட அடிகளார், இப்படி ரீங்காரமிடும் நீ, நம் தலைவனை நோக்கி ரீங்காரமிடுவாயாக என்ற கருத்தில் 'சென்று ஊதாய் கோத்தும்பீ என்ற சொற்களை இறுதியாக வைத்து இருபது பாடல்கள் பாடுகிறார். திருக்கோத்தும்பியின் முதல்பாடல் இறைவன் திருவடிப் பெருமை பேசுகிறது. அப்பாடல் சே அடிக்கே சென்றுதாய்’ என்று முடிகிறது. சே அடி என்பது செம்மையான என்ற பொருளோடுமட்டு மல்லாமல் சிவந்த என்ற பொருளையும் தரும். இறைவனுடைய சிவந்த திருவடியை நோக்கி ஊதுவாயாக என்று கூறியதில் ஒரு