பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 333 'பல்விருகமாய்ப் பறவையாய். எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்’ என்று பாடிய பெருமானார், அதனுள் வைத்திருக்கும் ஓர் அரிய கருத்தை நம்மில் பலரும் காணத் தவறிவிட்டோம் உயிர்வர்க்கம் முழுவதும் ஒன்றே. அதாவது புல் முதல் ஆறறிவு படைத்த மனிதன்வரை ஒரே உயிர் எடுக்கும் பல்வேறு உடல்கள் என்கிறார் அடிகளார். அப்படியானால் அறிவு வளர்ச்சி முறையில், பொறி புலன் வளர்ச்சி முறையில் ஒன்றுக்கொன்று வேறுபாடிருக்க முடியுமே தவிர, எல்லா உடம்பினுள்ளும் உறையும் உயிர் என்று எடுத்துக் கொண்டால் அவை அனைத்தும் சமமென்பது இங்கு நினைவு கொள்ள வேண்டிய தத்துவம். அன்றியும் உரை சேரும் என்று தொடங்கும் தேவாரப் பாடலில் ஆளுடைய பிள்ளையார் நிரை சேரப் படைத்து அவற்றின் உயிர்க்கு உயிராய் அங்கங்கே நின்றான் (திருமுறை: 1-132-4) என்று சொல்வதையும் காண்டல் வேண்டும். இவர்களையன்றிப் பிற்காலத்தில் வாழ்ந்த தாயுமானவப் பெருந்தகையும் பரிபூரண ஆனந்தப் பதிகத்தில் 'பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரண ஆனந்தமே என்றும் பார்க்கின்ற மலருடு நீயே இருத்தி' (தாயு.கருணாகர:6) என்றும் பாடியுள்ளார் ஆதலின், இப்பெருமக்கள் உயிர்களிடையே வேறுபாடு பாராட்டுவ தில்லை என்பது நன்கு அறியப்படும். இந்த நினைவோடு கோத்தும்பியையும், குயில்பத்தையும் பார்ப்போமானால், இவை இரண்டிலும் அடிகளாரால் கூறப்பெற்ற செய்திகள், மனித குலம் முழுவதற்கும் தேவையான செய்திகள் என்பது நன்கு புலப்படும். தும்பிக்கும், குயிலுக்கும் ஒரு பொதுத்தன்மை உண்டு. அரச வண்டாகிய தும்பி இரண்டு அல்லது இரண்டரைக் கட்டை சுருதியில் ஏழு சுரங்களையும் அனாயாசமாக