பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 339 இதுவாகும். அதனால்தான் அவன் திருவடிகளில் சென்று ஒதுவாயாக என்று உன்னை வேண்டிக்கொண்டேன்’ என்கிறார். பதினெட்டுப் பாடல்களில் வண்டை வேண்டிக் கொண்ட பிறகு அந்த வண்டுக்கு ஒருவாறு மனத் தென்பு ஏற்பட்டு, அவன் திருவடிகளை நோக்கிப் புறப்பட்டது போலும், அந்த நிலையில் அடிகளார்மாட்டு எல்லை யில்லாத நன்றிப் பெருக்கம் அவ்வண்டிற்கு ஏற்பட்டிருக்குமல்லவா? எனவே, அந்த வண்டை நோக்கி ‘வண்டே நீ அவன் திருவடிகளைச் சேரும்போது உன்னை ஆற்றுப்படுத்தியவனாகிய எனக்கும் ஒரு சிறு உபகாரம் செய்வாயாக. அது என்ன தெரியுமா? என் உள்ளத்தில் தோன்றும் துயரங்களில் ஒன்றைக்கூட அவன் போக்க வில்லை (திருவாச 233) என்பதைத் தயைகூர்ந்து கூறுவாயாக’ என்று கூறுகிறார். மேலும் உண்மையான அகத்துறையில் ஒர் அற்புதமான பாட்டைப் பாடுகின்றார். தலைவனிடத்தில் எனக்கோ அன்பில்லை. ஆனால், இந்த ரகசியத்தை அவனும் நானும்மட்டுமே அறிவோம். அப்படியிருந்தும் அத்தலைமகன் என்னை வந்து ஆட்கொண்டதை உலகம் முழுதும் அறியும். அவன் வந்து ஆட்கொள்ள என்பால் தகுதியொன்றும் இல்லை. அவன் கருணை காரணமாகவே என்னை ஆட்கொண்டான். அதனை நினைவூட்டி, மறுபடியும் அவன் என்னை வந்து கூடவேண்டும் என்று அவனிடம் குளிர்ந்து ஊதாய்' (திருவாச. 227) என்று கூறுகிறார். . ஊதுவாயாக என்று சொல்லத் தொடங்கியவர் "குளிர்ந்து ஊதாய்’ என்று சொல்வதன் நோக்கமென்ன? குளிர்ந்து என்று வரும் சொல், உன்னுடைய மனம் குளிர்ந்து ஊதுவாயாக என்ற பொருளைத் தந்து