பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 நிற்கின்றது. வண்டின் மனம் குளிர்ந்ததால் பெறும் பயன் யாது? மனம் குளிர்ந்த நிலையில் ஒன்றைச் சொல்லத் தொடங்கினால்மட்டுமே கேட்பவரின் மனநிலையை ஆராய்ந்து, தெளிந்து இனிய சொற்களாகத் தேர்ந்தெடுத்து, கேட்பவர் மனம் ஏற்கும் வகையில் சொல்லமுடியும். அதனால்தான் குளிர்ந்து ஊதாய்’ என்றார். திருத்தெள்ளேணம் தெள்ளேணம் என்ற தலைப்பில் இருபது பாடல்கள் அமைந்துள்ளன. முன்னர்க் கூறப்பெற்றதுபோல் தமிழிலக் கியத்தில் வேறெங்கும் காணப்பெறாத சொல்லாகும் தெள்ளேணம் என்பது. இவ்வளவு சிறந்த பாடல்களை இத்தலைப்பின்கீழ் அடிகளார் பாடிய பிறகாவது பின்வந்தவர்கள் இதனைப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், என்ன காரணத்தாலோ இது செய்யப் பெறவில்லை நற்சாழல், தோள்வீச்சு என்பவை அடியார்க்கு நல்லார் எடுத்துக்காட்டும் பல்வரிக் கூத்துக்களுள் இடம் பெறுகின்றன என்பது உண்மைதான். அடிகளார் பழமையான தோள்நோக்கத்தையும் (தோள் வீச்சையும்) பயன்படுத்திக் கொண்டதோடு, தெள்ளேனம் போன்ற புதிய விளையாட்டுக்களையும் அறிமுகப்படுத்துகிறார். இப்பகுதியின் முதல்பாடல் தமிழர் கண்ட மாபெரும் தத்துவத்தை விளக்குவதாக அமைந்துள்ளது. அடிமுடி தேடிய கதையில் அடிகளார் அதிகம் ஈடுபட்டுள்ளார் என்பது வெளிப்படை ஒவ்வொரு பதிகத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இக்கதையைப் பயன்படுத்தி 32. GYTGYFTIT.