பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 341 சிந்தித்துப்பார்த்தால் இதற்கு ஒரு காரணத்தைக் கண்டுபிடிக்கலாம் என்று தோன்றுகிறது. மூவருள் ஒருவர் என்று போற்றப்படும் ஒருவர், எந்தத் திருவடியைத் தேடிச்சென்று காணமுடியவில்லை. காணவும் முடியாது என்ற முடிவுற்கு வந்தாரோ அந்தத் திருவடி, அடிகளாரைப் பொறுத்தவரை எவ்வித முயற்சியுமின்றிக் கிடைத்துவிட்டது. கிடைத்ததோடு அல்லாமல் ஒரே விநாடியில் திருவாதவூரராக இருந்த ஒருவரை மணிவாசகராக மாற்றிவிட்டது. எனவே, அடிகளாரைப் பொறுத்தவரை, இறைவன்மேல் கொண்ட ஈடுபாட்டைக் காட்டிலும், அவனைவிடச் சிறந்தவை என்று கூறப்படும் அவன் திருநாமங்களைக் காட்டிலும், அவன் திருவடியே அதிகம் போற்றப்படும் பொருளாக அமைந்துவிட்டது. அதனாலேயே நூற்றுக்கணக்கான இடங்களில் திருவடிப் பெருமையைப் பேசுகிறார் அடிகளார். அந்தத் திருவடியை நினைக்கும்போதெல்லாம்- அது தமக்கு எளிதாகத் கிடைத்ததை நினைக்கும்போதெல்லாம்- அதனைக் காணமுடியாது திண்டாடிய மாலின் நினைவு வருவது இயல்புதானே! இந்த நினைவுடன்தான் முதற்பாடல் தோன்றுகிறது. பாடலின் முதலடியில் அமைந்துள்ள சொற்களின் அமைப்புமுறை சிந்திக்க வைக்கிறது. திருமால் வராக அவதாரம் எடுத்துக் கீழே கீழே தோண்டிக்கொண்டு சென்றதன் நோக்கமென்ன? திருவடிகளைக் கண்டுவிட வேண்டும் என்றுதானே சென்றார்? அப்படியானால் "பன்றியாய்ச் சென்று காணாத் திருவடியை’ என்றுதானே பாடியிருக்க வேண்டும். சென்று உணராத் திருவடியை என்று பாடியதன் நோக்கமென்ன? w இறைவன் திருவடி, காட்சிப் பொருளன்று. அதை வலியுறுத்தவே ஒருநாமம், ஒருருவம் ஒன்றுமிலார்க்கு"