பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 மண்ணோர்க்கு மருந்தாகவும், விண்னோர்க்கு முழுமுதலாகவும், (வைப்பு நிதி) பாதாளத்தார்க்கு வித்தாகவும் இருக்கின்றான். நூலறிவும் நுழையமுடியாத நுண்ணியனாகிய அவன், வித்தாகவும், முழுமுதலாகவும் சேமநிதியாக உள்ளவனுமாகிய அவன், இப்பொழுது கண்ணார வந்து நின்றான். என்ன புதுமை! அறிவும் நுழையமுடியாத துண்ணியனாகிய, அவன் ஊனக் கண்களாலும், காணும் படி இதோ எதிரே வந்து நிற்கின்றான். தாமரைக் கண்ணனும், நான்முகனும், உறக்கமும், இமைப்பும் இல்லாத கண்களை உடைய தேவர்களும் ஏன் இவனைக் శ్రీ:fడుif முடியவில்லை? மானிடராகிய அடிகளார் கண்ணாரக் கண்டு களிக்கும்படியாக எதிரே வந்து நின்ற ஒருவனை மேலே கூறிய அனைவரும் காண முடியவில்லை என்றால், இதை எப்படி நம்புவது? அவர்கள் எதிரே, அவன் நுண்ணியனாகிவிட்டான். நுண்ணியனாக இருப்பினும் முயன்று, கூர்ந்து கண்டிருக்கலாமே! ஏன் அவர்கள் காண முடியவில்லை? அவர்கள் கண்ணை மறைத்தது, அவர்கள் ஆணவம், அதனால் கருணைக் கடலாக உள்ள அவன்கூட, அவர்களிடம் கருணை காட்டவில்லை. அத்தகைய ஒருவன் கண்ணார வந்து நின்றான். விண்ணோர் முழுமுதலாகவும், பாதாளத்தார் வித்தாகவும் உள்ள அவன் வந்து நின்றால் எப்படி அவனைக் கண்டு கொள்வது? மனிதர்களாகிய நம்முடைய பார்வைக்கு ஒர் எல்லை உண்டாயிற்றே, அந்த எல்லையை யெல்லாம் கடந்து நிற்கின்ற ஒருவனை, அடிகளார் எப்படிக் கண்டுகொண்டார்? அவரின் பார்வையின் எல்லையளவு விரிந்து நின்றது அவன் திருவடிகளே ஆதலின், வந்து நின்றான் கருணைக் கழல்பாடி என்றார். அந்தக் கழலும், இவருக்கு மட்டும் எவ்வாறு காட்சி தந்தது? “தம்மாட்டுக்