பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 349 அப்பொருளின் கருணையும் ஒரு சேர நினைவுக்கு வருகின்றன. நம்மையும் ஒரு பொருளாக்கி நம்முள் புகுந்ததோடு நில்லாமல் உள்ளத்தையும் உருக்கிவிட்டதே என்ற நினைவு வந்தவுடன் கண்ணிர் ஆறாகப் பெருகுகின்றது. இந்தப் பாடலிலும் இதுவரை வந்த பாடல்களைப் போலவே வியப்பு மேலீட்டால் தெள்ளேணம் கொட்டாமோ என்று பாடுகிறார். மால், நான்முகன் என்பவரைப்பற்றியே பத்துப் பாடல்கள் பாடிய அடிகளார், இப்பொழுது இன்னும் சற்று விரிவாக, அவர்களால் அறியப்படாதவன் என்று மட்டும் நிறுத்தாமல், அவனுடைய இயல்பை மற்றொரு கோணத்தில் நின்று பேசுகிறார். 'விண்ணோர் முழுமுதல் பாதாளத்தார் வித்து’ (253) என்று தொடங்குவதால் நாம் வாழும் இப்பூமிக்கு மேலும் கீழும் உள்ள பகுதிகளை எடுத்துக் கூறும் முறையில் ஒர் அழகைச் சித்த்ரிக்கின்றார். ஒரு பொருள் ஓங்கி வளர்ந்திருக்கிறதென்றாலும் அதன் தோற்றம் ஒரு விதையில்தானே அடங்கியிருக்க வேண்டும்? எனவே, பாதாளத்தார் வித்து என்பதால் இப்பிரபஞ்சத்தின் அடிப்பகுதியை வித்து என்றும், விண்ணோர் முழுமுதல் என்பதால் பிரபஞ்சத்தின் நுனிப்பகுதியையும் நம் கற்பனையில் கொண்டு வருகிறார். இவ்வாறு வித்தாகவும், மரத்தின் நுனியாகவும் இருக்கின்ற அந்தப் பரம்பொருளின் இயல்பையும் அது பிறவிக்கு மருந்து என்பதையும் பாதாளத்தாரும், விண்ணோரும் அறிந்துகொள்ளவில்லை. நல்ல வேளையாக, இடையில் நின்ற மண்ணுலத்தில் உள்ளவர்கள் இந்த முழுமுதற்பொருள்தான் நம் பிறவிக்கு மருந்து என்று உணர்ந்துள்ளார்கள் ஆதலின் மண்ணோர் மருந்து' என்கிறார்.